திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன்,ஜெய நிர்மலா, ஆண்டாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநகராட்சி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட வாரிசுதாரர் பணி நியமனம் தற்போது நடக்கும் ஆட்சியில் மீண்டும் நிறைவேற்றப்படுமா? என்ற வாசகங்கள் எழுதிய பதாகையுடன் கூட்ட அரங்கிற்குள் வந்து, பதாகையை ஏந்தி நின்றார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. மேலும் மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறுகையில் இது, வரம்பு மீறிய செயல், அவைக்குள் பதாகை ஏந்தி வரக்கூடாது மேலும் உங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்தை முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கவுன்சிலர் சுரேஷ் அவரது இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.
