ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 80-வது பள்ளி பிறந்தநாள் விழா மற்றும் ஆண்டு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தலைவர் நந்தகுமார் , எஸ்.இ.எஸ் செயலர் கஸ்தூரி ரங்கன் பொருளாளர் கிரி மற்றும் சி எம் ஏ ஆர் அசோகன், செல்வராஜ் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் சாந்தி அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 மேலும் கிழக்கு ரங்கா பள்ளியின் தலைமை ஆசிரியர் சைவ ராஜூ தலைமை ஆசிரியை மீனலோச்சினி எஸ் இ எஸ் நிர்வாகிகள் குமார் செல்வராஜ் மற்றும் பள்ளியின் ஆசிரியர் அலுவலக சங்கத்தினர் மாணவிகள் மாணவிகளின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சன்மானம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்