Month: March 2022

திருச்சி வந்த கவர்னர் ஆர்.என். ரவிக்கு அதிகாரிகள் வரவேற்பு.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார், வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு…

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை – கொலை செய்த பாட்டி கைது.

கேரளா மாநிலம், அங்கமாலி பகுதியை சேர்ந்தவர் சஜீஸ் இவரது மனைவி பிஜூ தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பிஜூவின் தாயார் சிக்ஸி 2 குழந்தைகளையும் கவனித்து வந்தார். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த…

திருச்சியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து – பெண்கள் முற்றுகை போராட்டம்.

திருச்சி கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சார்பாக திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அவர்கள் கூறியதாவது; தொடர்ந்து உறையூர் சாலை ரோடு பகுதியில்…

திருச்சியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு உதவி மையம்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்ப தாரர்களுக்கு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தாலுகா மட்டும் ஆயுதப் படையில்…

சிறுநீரக பாதுகாப்பு, உடலுறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தினால் சிறுநீரகம் செயல் இழப்பதுடன், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதும், வலிநிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 20லட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சிறுநீரகத்தை பாதுகாக்க…

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி திருவிழா இன்று நடைபெற்றது.

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும் குட்டிக் குடி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். சோழ மன்னர்களின் குல தெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி நகர காவல் தெய்வமாக விளங்கும் குழுமாயி அம்மன் கோவில்…

திருச்சியில் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த திமுக நிர்வாகி.

திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொட்டியம் பேரூராட்சியின் துணை தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்சித் தலைமையால் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. .இந்நிலையில் தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட 6வது வார்டில் போட்டியிட்டு…

திருச்சியில் மெய்நிகர் அஞ்சல் தலை டிஜிட்டல் கண்காட்சி மற்றும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு.

இந்திய அஞ்சல் துறையின் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை கண்காட்சி துவக்க விழா காஜாமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் காவிரி மண்டல மெய் நிகர் அஞ்சல் தலை…

திருச்சியில் கார் திருட்டு – சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்‌தலை பகுதியில் உள்ள காமராஜர் தெருவை சேர்ந்தவர் தாமோதரன் வயது 45.இவர் வழக்கம் போல் தனது 2,90,000 மதிப்புள்ள காரை (Toyoto Etios) நேற்று இரவு தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர்…

திருச்சியில் நடந்த பெண்கள் தின கொண்டாட்ட படங்கள்.

பெண்கள் சமூகத்திற்கு செய்துவரும் சேவை மற்றும் அர்ப்பணிப்பு இன்றியமையாத தேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு வருடம் தோறும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உலக பெண்கள் தின கொண்டாட்ட…

தேசிய அளவில் ஏரோஸ் கேட்டோபால் விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு.

தேசிய அளவிலான 7-வது ஏரோஸ் கேட்டோபால் (AEROSKATOBALL) விளையாட்டு போட்டி மார்ச் மாதம் 4,5 மற்றும் 6ஆம் தேதிகளில் மிக பிரமாண்டமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய அளவில் சேட்டன் பகவாட் தலைமையில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டியில் பல மாநிலங்களில் இருந்து…

தமிழ்நாடு அரசு சார்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் – கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி கோ – அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்ற உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார். அதனைத்…

உக்ரேனில் இருந்து திருச்சி மாணவர்கள் 23 பேரை இதுவரை மீட்டு உள்ளோம்- கலெக்டர் சிவராசு பேட்டி.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி திருச்சி வெஸ்டரி மேல்நிலைப்பள்ளியில் அரசு குளிர்சாதன பேருந்தில் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வ.உ. சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு…

திருச்சியில் அமைதி புறவாக மாறிய பள்ளி மாணவிகள்.

உலக பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. திருச்சி யுகா பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பள்ளி சார்பில் தற்போது, ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்த வலியுறுத்தியும், பெண்கள் தினத்தில் அமைதி நிலவ…

சேற்றுக் குளத்தில் குளித்து கும்மாளமிட்ட திருச்சி கோவில் யானை அகிலா

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சேற்றுக் குளியல் குளத்தில் கோவில் யானை அகிலா உற்சாக குளியல் போட்டது. பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இக்கோவிலில் அகிலா என்ற யானை கடந்த…