Month: March 2022

பேராசிரியர் அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு நாள் – அமைச்சர் கே.என்.நேரு மரியாதை.

மறைந்த முன்னாள் திமுக கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் 2-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள கழக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் பேராசிரியரின் திருவுருவப் படத்திற்கு…

கருவேல முள் செடிகளை அகற்ற கோரி மாநிலத் தலைவர் பூ.விஸ்வ நாதன் தலைமையில் விவசாயிகள் முற்றுகை போராட்டம்.

தமிழக பஞ்சாயத்துக்களில் உள்ள 25-ஆயிரம் ஏரிகள், குளங்கள், ஊரணிகளில் உள்ள வேலிக் கருவை முள் செடிகளை அகற்ற கோரி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமையில் இன்று காலை விவசாயிகள் கையில் கருவேல…

முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு – டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம்.

திருச்சி உறையூர் தமிழ் ஹெர்பல்ஸ் அக்குபஞ்சர் மையத்தில் திமுக கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடந்தது. திருச்சி உறையூர் தியாகராஜ நகர்…

திருச்சி தேசியக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா – 1177 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.

திருச்சி தேசிய கல்லூரியில் கடந்த 2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா தேசிய கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. இவ்விழாவிற்கு கல்லூரி ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் டாக்டர் பிரசாத் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மகேந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின்…

தனியார் பஸ் டிரைவரை தாக்கிய போலீஸ் – சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மேலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் செல்வம் வயது 47 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் To துவாக்குடி வரை தனியார் பஸ்சை இயக்கி வருகிறார்.மேலும் இவர் திருச்சி மாவட்ட தனியார் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சங்க தலைவராகவும்…

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த – பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில்.

நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர் பதவிகளை முஸ்லீம்களுக்கு வழங்கி உரிய அங்கீகாரம் அளித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தில் நடந்து முடிந்த…

காவேரி மருத்துவ மனையில் ரத்தபுற்று நோயால் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை – Dr.செங் குட்டுவன் தகவல்.

புற்று நோயால் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு காவிரி மருத்துவ மனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள காவிரி மருத்துவமனையில் நடைபெற்றது. திருச்சி காவேரி மருத்துவமனையின் இணை…

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் தமிழக அரசு விரைவில் முடிவு எடுக்க வில்லை என்றால் தமிழக அளவில் போராட்டம் – சட்ட நடவடிக்கை குழு அறிவிப்பு.

தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி சட்ட நடவடிக்கை குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உதுமான் அலி பேட்டி அளிக்கையில்:- இதில் இஸ்லாமிய சிறை…

எல்ஐசியின் பங்குகளை விற்க முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து எல்ஐசி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

இந்தியாவில் பிரதமர் மோடி அரசு பதவி ஏற்றது முதல் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது இதனை கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினாலும் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து தனியாருக்கு விற்கும் முயற்சியில் மத்திய…

முன்னாள் அமைச்சர் அன்பில் தர்ம லிங்கத்தின் 29-வது நினைவு நாள் அமைச்சர்கள் மரியாதை.

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 29-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சித் துரை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக்…

மேயர் அன்பழகனுக்கு – மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகபடியான இடங்களில் வெற்றி பெற்றது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 49 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள், 5 வார்டுகளில் காங்கிரஸ், 3 வார்டுகளில் அதிமுக, மதிமுக, சுயேச்சை…

திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகனும், து.மேயராக திவ்யாவும் போட்டியின்றி தேர்வு – அமைச்சர்கள் வாழ்த்து.

திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை மேயராக திவ்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்று 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இதில் மொத்தமுள்ள 65…

வீட்டின் பூட்டை உடைத்து 159 பவுன் நகை 20 கிலோ வெள்ளி பொருட்கள் 15 லட்சம் ரொக்கம் கொள்ளை.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள மாந்துரை கிராமத்தை வசிப்பவர் ஏகாம்பரம் பிள்ளை. பண்ணையாரான இவருக்கு அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன. இவர்களுக்கு விசாலி என்ற மகள் திருமணமாகி திருச்சி…

யாதவ சமுதாயத்துக்கு 3 துணை மேயர் பதவிகள் வழங்கிய முதல்வருக்கு பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் நன்றி தெரிவிப்பு.

யாதவர்களின் அரசியல் கட்சியான பாரத முன்னேற்றக் கழக தலைவர் பாரதராஜா யாதவ், பொதுச்செயலாளர் ஆறுமுகசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:- தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் திமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்றதையொட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு யாதவ சமுதாயம்…

திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற 73- குழந்தைகளுக்கு கேட்கும் திறன், பேசும் திறன் கிடைத்துள்ளது – டீன் வனிதா தகவல்.

உலக காது கேட்கும் நாள் மார்ச் 3-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது, இதனையொட்டி தேசிய காதுகேளாமை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டம் மற்றும் கி.ஆ.பெ அரசு மருத்துவ கல்லூரி காது மூக்கு தொண்டை பிரிவு இணைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு…