Month: February 2023

திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 281 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது. ஆண்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 75-வது பிறந்த நாளையொட்டி பகுதி செயலாளர் முஸ்தபா தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் தில்லை நகர் 7-வது கிராஸ் பகுதியில் மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் – கோவிலில் சிறப்பு பூஜை செய்து அன்னதானம் வழங்கிய அமமுகவினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அமமுகவினர் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாடினர். அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அமமுக சார்பில்…

கலெக்டர் அலுவலகம் முன்பு மக்காச்சோளம் , பருத்தியை கீழே கொட்டி தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது அதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது குறைகளை கூறி வருகின்றனர். தமிழக ஆறு மற்றும் ஏரி பாசன விவசாயிகள்…

மாற்றுத் திறனாளி களுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கு வதற்கான தகுதி தேர்வு.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்குவதற்கான தகுதி தேர்வு திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது.  இந்த நேர்முகத் தகுதி தேர்வில் கலந்து கொண்ட…

16 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே வி.துறையூரில் வசிப்பவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியன் வயது 43, இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகள் உள்ளன. லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10ம் வகுப்பு முடித்த 16…

சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஏடிஜிபி.

தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குநர் சங்கர், திருச்சி மாநகரத்தில் உள்ள கண்டோன்மெண்ட் மற்றும் தில்லைநகர் ஆகிய காவல்நிலையங்களை பார்வையிட்டும், அங்கு வரவேற்பாளர்களின் (Receptionist) செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு செய்தும், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தும், பின் தக்க…

எடப்பாடி பொதுச் செயலாளர் தேர்வு செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – கவுன்சிலர் அரவிந்த் தலைமையில் அதிமுகவினர் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்த அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த…

திருச்சி ஒத்தக்கடை மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி கோவில் குட்டி குடி திருவிழா

திருச்சி ஒத்தக்கடை கான்வென்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ ராஜ கணபதி, முண்ணுடையான், மாசி சப்பாணி கருப்பண்ண சுவாமி, அன்னை முத்து மாரியம்மன் திருக்கோவிலின் 46-ஆம் ஆண்டு திருவிழா கடந்த 7 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 9 ஜோடிகளுக்கு இலவச திருமணம் 4 கிராம் தங்கம், ஒரு லட்சம் மதிப்புள்ள சீர்வரிசைகள்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கோவில் வளாகத்தில் இலவசமாக 9 ஜோடிகளுக்கு திருக்கோவில் சார்பில் திருமண விழா திருச்சி மண்டல…

டெல்லி தான் அதிமுகவை இயக்குகிறது – திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.

அ.ம.மு. க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நடத்திய பொதுக்குழு செல்லும், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பற்றி தீர்ப்பு கூறவில்லை. அதே போல், இந்த…

அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு – இயக்குனர் கர்னல் தீபக் குமார் திருச்சியில் பேட்டி.

இந்திய ராணுவத்தின் ஆட்சேர்ப்பு முகமை இந்திய ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான நடைமுறைகளில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.அப்போது பேசிய அவர் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு…

திருச்சியில் மாற்றுத் திறனாளி களுக்கான இலவச மருத்துவ முகாம் .

தமிழக பள்ளிக்கல்வித்துறை மற்றும் திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் புனித ஜான் பிரிட்டோ நடுநிலைப்பள்ளி வளாகத்தில்…

எழுத்தமிழ் இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த உலக தாய் மொழித் தின விழா.

திருச்சி தமிழ் சங்கத்தில் உலக தாய்மொழி தின விழாவை முன்னிட்டு எழு தமிழ் இயக்கத்தின் தலைவர்பட்டைய தணிக்கையர் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி தின விழா நிகழ்ச்யில்தமிழ் சங்க நிர்வாகிகள் உதயகுமார் கோவிந்தசாமி மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர் லால்குடி…

முதலமைச்சர் கோப்பை க்கான விளையாட்டுப் போட்டிகள் – மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்…