இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி பாலமுருகன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 3000- ஆண்டு கால பழைமையான கல் சிலை 2019 ஆம் ஆண்டு திருடப்பட்டதாக புகார் காவல் நிலையத்தில் இருந்து வந்த நிலையில் – சிலை கடந்த தடுப்பு பிரிவிற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆலயத்தின் உட்பகுதியில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் சந்தேகத்திற்கு இடமான நபர்களை விசாரணை செய்ததில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தம்பி குளம் சின்ன தெரு பகுதியை சேர்ந்த நீலகண்டன் என்பவரை விசாரணை செய்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். மேலும் அவரது கூட்டாளி மிக நுணுக்கமாக திட்டமிட்டு கொள்ளையடித்து பண ஆதாயத்திற்காக வெளிநாட்டிற்கு சிலையை அனுப்பி வருவதாகவும் வாக்குமூலமாக நீலகண்டன் அளித்ததன் பேரில் இரண்டாவது குற்றவாளியான மணிகண்டனையும் தேடி வந்தோம். இந்நிலையில் நேற்று அதிகாலை வேலூரில் மணிகண்டனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் குழு கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ஆஞ்சநேயர் சிலை மீட்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அது 300 ஆண்டுகள் பழமையானது என தெரிய வந்தது. அதனை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம். அதில் நீலகண்டன் என்பவர் ஜோசியம், குறி பார்த்து வருவதாகவும் அவ்வாறு அந்த கோவிலுக்கு சென்று அந்த சிலையை திருடியுள்ளனர். அவர்களுக்கு உடந்தையாக வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம் என்றார்.

மேலும் இந்தாண்டு மட்டும் உலோக சிலை, கல் சிலை உள்ளிட்ட 248 காணாமல் போன பொருட்கள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மூலம் மீட்கப்பட்டுள்ளது. இது தவிர சிலை கடத்தல் தொடத்பாக 62 வழக்குகள் இந்தாண்டு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *