திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி திருவெறும்பூர் அருகே உள்ள அரசங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது கர்ப்பிணி பெண்கள் வார பரிசோதனைக்காக வந்திருந்தனர். அப்படி வந்தவர்கள் அமர்வதற்கு இடம் இல்லாமல் வெளியில் நின்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அதிகாரியிடம் என்ன காரணத்திற்கு ஏன் இவர்களை வெளியில் அமர வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்டதற்கு அவர்கள் அமர்வதற்கு உரிய இடம் இல்லை என கூறியதை தொடர்ந்து அந்த பகுதியில் உடனடியாக காத்திருக்கும் அளவிற்கு ஏதுவாக செட்டு அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார்.

மேலும் மருத்துவமனைக்கு நாள் தோறும் அதிக அளவில் நோயாளிகள் வந்து செல்வதோடு இங்கு பிரசவம் உள்ளிட்ட வசதிகளும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ளது இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின்சாரம் தடைபடும் போது அவர்களுக்கு போதிய வசதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடனடியாக ஜெனரேட்டர் அமைத்துக் கொடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார். மேலும் நோயாளிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நடத்தும் விதங்கள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போழுது மருத்துவ நோயாளியின் உடன் இருப்பவர்கள் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் அவர்களுடன் வரும் உறவினர்கள் இயற்கை உபாதைக்கு பயன்படுத்தப்பட வேண்டிய கழிப்பறைகள் எஸ் பி எம் மற்றும் 15ஆவது நிதி குழு மானிய திட்டம் 2023 2024 நிதியாண்டில் தலா ரூ 3.5 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு இடங்களில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது.

அப்படி கட்டப்பட்ட கழிப்பறைகள் பூட்டப்பட்டு இருக்கிறது என்றும் இதனால் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியவில்லை எனவும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்கள் கூறியதை தொடர்ந்து உடனடியாக அதனை பார்த்த பொழுது பூட்டப்பட்டிருந்தது சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஊழியர்களிடம் பூட்டப்பட்டிருந்த பூட்டின் சாவியை கொண்டு வருமாறு அறிவுறுத்தினார் மேலும் அவர்கள் தங்களிடம் இல்லை ஊராட்சி நிர்வாகத்திடம் இருப்பதாக கூறியதை தொடர்ந்து ஊரட்சி செயலரிடம் கேட்ட பொழுது இல்லை மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என கூறியதை தொடர்ந்து ஒரு வழியாக மருத்துவமனை ஊழியர்கள் கழிவறை சாவியை கொண்டு வந்து கொடுத்தனர். அதை திறந்து பார்த்து பொழுது பணிகள் சரிவர முடிவடையாமல் அதை யாரும் பயன்படுத்தாமலும் இருப்பது தெரிய வந்தது.மேலும் இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட எம்எல்ஏ நவல்பட்டு விஜி உடனடியாக கழிவறை பணியை முழுமையாக சரி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் எம் எல் ஏ நாவல்பட்டு விஜிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மூர்த்தி, பிரபா, சந்துரு பாலா, சுபாஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
