அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவர்களின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் மாரத்தான் போட்டி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த மாரத்தான் போட்டிற்கு எம்பி கிறிஸ்டோபர் திலக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். இந்த மாரத்தான் போட்டியானது உழவர் சந்தை மைதானத்தில் தொடங்கி ஸ்டூடன்ட் சாலை வழியாக கோர்ட் மாநகராட்சி தலைமை தபால் நிலையம் கல்லுக்குழி மேம்பாலம் டிவிஎஸ் டோல்கேட் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கை சென்று அடைந்தது.

இந்த மாரத்தான் போட்டியில் ஆறு வயது சிறுவர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்றனர். மேலும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்ற முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது அதேபோல் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை எம்பி கிறிஸ்டோபர் திலக் வழங்கினார்.

