அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் நல்வாழ்த்துக்களுடன் அகில இந்திய மகளிர் காங்கிரஸின் தேசிய தலைவி அல்கா லாம்பா அவர்களின் ஒப்புதலுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் மாநில தலைவி ராமலெட்சுமி அவர்களின் பரிந்துரைப்படி

மகளிர் காங்கிரசின் மாநில பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அபிநயா ரகுநாதன் அவர்களுக்கு திருச்சி அருணாச்சலம் மன்றத்தில் காங்கிரஸ் கமிட்டி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் மற்றும் காங்கிரஸ் மகளிர் நிர்வாகிகள் ஷீலா செலஸ், மாரீஸ்வரி மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
