திருச்சி அண்ணா விளையாட்டரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பட்டு ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பதாகையில் ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள் கையொப்பமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டார்ட் RUN, ஸ்டாப் DRUGS போதை பொருள் எதிர்ப்பு ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஓட்டத்தில் 14 வயதிற்கு மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என சுமார் 500 நபர்கள் பங்கேற்றனர். இந்த விழிப்புணர்வு ஓட்டமானது திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் இருந்து தொடங்கி டி.வி.எஸ் டோல்கேட், மன்னார்புரம் ரவுண்டானா, காஜாமலை வழியாக மீண்டும் அண்ணா விளையட்டரங்கில் நிறைவடைந்தது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, உதவி ஆணையர் (கலால்) சிவா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசுகந்தி, விளையாட்டு விடுதி மேலாளர் மற்றும் பயிற்றுநர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
