தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும்,முதலமைச்சருமான விஜய்யின் 52 -வது பிறந்தநாளை முன்னிட்டு  பொதுச் செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின் படி திருச்சி சந்துகடையில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

பொறுப்பாளர் தர்கா சவுக்கத், வெல்லமண்டி ஜவகர்லால் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலக்கரை கௌதமன் வரவேற்றார். விழாவில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு ஆகியோர் தமிழக வெற்றி கழகத்தின் கொடி ஏற்றி,ஸபொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

சந்துக்கடை சந்துரு ஏற்பாட்டில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சிந்தாமணி பகுதி செயலாளர் ஜீவா, சிந்தாமணி முத்துக்குமார், வழக்கறிஞர்கள் நியூமேன் , புவனேஸ்வரி வட்டச் செயலாளர்கள் எம் எஸ் மாரி,தனபால்,நிர்வாகிகள் பெட்டவாய்த்தலை ராமச்சந்திரன், செந்தில், டி. ராஜா முகமது ;எஸ் பி கார்த்திக்,சி கே பாஸ்கர், கண்ணன், தென்னூர் பிரேம், நிர்வாகிகள் ரோஜர் ,வரகனேரி சரவணன், பிரதீப், கணேசன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்