திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ரெ மதனா. திமுக மகளிர் தொண்டர் அணி அமைப்பாளராக பதவி வகித்து வந்த அவர் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார் இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட முகநூல் ஐடியில் இருந்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி முகநூலில் பதிவிட்டனர் அதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார் இந்நிலையில் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதை தொடர்ந்து இன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் குறைதீர்ப்பு முகாமில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்

 அதில் ‘ என்னுடைய கண்ணியத்தையும் மரியாதையையும் பாதிக்கும் வகையில் ஸ்பா நடத்துகிறார் என்றெல்லாம் பொய்யான தகவல்களை திமுகவைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள் எனவே சம்பந்தப்பட்ட நபர்களின் செயல்பாடுகளை விசாரித்து ஆபாச மற்றும் அவதூறு கருத்துக்களை பதிவிடுபவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்