திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பில் 47 வது வார்டு அருளானந்தர் சர்ச் அருகில் இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ண தேசிய கொடியேற்றி சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.

தமிழக வெற்றிக்கழக நிர்வாகியும், திருச்சி வி எஸ் லேன்ட் ப்ரோமோட்டர்ஸ் உரிமையாளருமான எல். நந்தகுமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம், ஜாமெண்டரி பாக்ஸ், பேனா, பென்சில் என பள்ளி உபகரண பொருட்கள் வழங்கபட்டது.பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கபட்டது.

சுதந்திர தின விழாவில் சுப்பிரமணியபுரம் சி. எஸ்.ஐ. பெத்தேல் ஆலய திருத்தந்தை மற்றும் தாஜுதீன், டேவிட்,சிபிச் சக்கரவர்த்தி,மணி, தனசேகர், சரண்ராஜ், வசீம், தேவி, தர்ஷினி,மேகா, பிரியதர்ஷினி, தீபக்,சமயபுரம் சதீஷ்,சாரதி, மஞ்ச திடல் சிவா, மணப்பாறை நடேஷ், சுப்பிரமணி, நடராஜ், ரேணுகாதேவி, கோகுல் உள்ளிட்ட த வெ க வினர் கலந்து கொண்டனர்
