Category: திருச்சி

திருச்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி படம் அவமதிப்பு – அதிமுகவில் பெரும் பரபரப்பு.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற கோரிக்கை எழுந்த நிலையில், முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரு அணிகளாகப் பிரிந்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கியதுடன் கடந்த ஜுன் 23ம்தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில்…

அரசு பள்ளி மாணவ ர்களின் “என் குப்பை எனது பொறுப்பு” விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடந்தது.

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி சார்பில் “என் குப்பை எனது பொறுப்பு” என் மாநகராட்சி, எனது சுகாதாரம், என் பெருமை” என்னும் விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தண்ணீர் அமைப்பு செயல்தலைவர் நீலமேகம்,…

திருச்சியில் வீசிய பலத்த காற்றால் முறிந்து விழுந்த 60-ஆண்டு கால மரம் – இருசக்கர வாகனம், மின் கம்பம் சேதம்.

திருச்சியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் சோமரசம்பேட்டை பகுதி சாலையில் உள்ள சுமார் 60-ஆண்டு கால பழமையான மரத்தின் மீது பலத்த காற்று வீசியதின் காரணமாக மரம் முறிந்து விழுந்தது. இதில் மரத்தின் அருகே நிறுத்தி…

திருச்சியில் முதன் முறையாக மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி – கமிஷனர் தகவல்.

திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள திருச்சி மாநகர ரைபில் கிளப் கடந்த 31.12.2021 – ந்தேதி தொடங்கப்பட்டது . மாவட்ட , தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டிக்கு கலந்து கொள்ள பயிற்சி பெறும் வகையில் திருச்சி மாநகர…

திருச்சி எல்ஃபின் நிதி நிறுவனம், கவுன்சிலர் பிரபாகரன் வீடு உள்ளிட்ட 18-இடத்தில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை.

தனியார் நிதி எல்ஃபின் (ELFIN) நிறுவனத்தில் பொதுமக்களின் பல கோடி பணத்தை மோசடி செய்தது தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் திருச்சியில் மாவட்டத்தில் உள்ள எல்ஃபின் தனியார் நிதி நிறுவனத்துடன் தொடர்புடைய 18-க்கும் மேற்பட்ட இடங்களில்…

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வரவில்லை பொதுப் பணித்துறை அதிகாரியிடம் விவசாயிகள் புகார்.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு ,மாநிலத் துணைத் தலைவர் மேகராஜன் மற்றும் விவசாயிகள் இன்று காலை திருச்சி சுப்ரமணியம் புரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை ராமமூர்த்தி இடம் ஒரு புகார் மனு…

விவசாய நிலங்களை அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சரடமங்கலம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு.

திருச்சி லால்குடி சரடமங்கலம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் விவசாய நிலங்களை சில நபர்கள் மோசடியாக அபகரித்தது குறித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-…

திருச்சியில் நடந்த உலக மக்கள் தொகை தின விழிப்பு ணர்வுப் பேரணி.

மாவட்ட குடும்ப நலச் செயலகத்தின் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வுப் பேரணி திருச்சி செயின்ட் ஜான் வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கி கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக சென்று கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் நிறைவடைந்தது. இந்த…

திருச்சி அரியாவூர் பகுதி மதுபான கடையை அகற்றகோரி – சமூக நீதிப் பேரவை சார்பில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அரியாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய,…

வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.செல்வ குமார் மீது பாலியல் புகார் – ஐ.ஜி-யிடம் பெண் மனு.

சென்னை பாலவாக்கம் பகுதியில் வசித்து வரும் திண்டுக்கல் நத்தம் பகுதியை சேர்ந்த சத்தியா பொன்னழகன் என்பவர் இன்று காலை திருச்சி ஐஜி அலுவலகத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி.…

திருச்சிராப் பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய தலைவராக கீதா வீரசேகரன் பதவி ஏற்பு – அமைச்சர் வாழ்த்து

திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருச்சி சென்னை பைபாஸ் ரோடு ஸ்ரீ சங்கீதா ஹோட்டலில் இன்று மாலை நடைபெற்றது இந்த விழாவிற்கு திருச்சிராப்பள்ளி சக்தி லயன்ஸ் சங்கத்தின் முன்னால் தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.…

திருச்சியில் நடந்த பக்ரீத் பண்டிகை – தமுமுக சார்பில் சிறப்பு தொழுகை..

இஸ்லாமிய முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பண்டிகையும் ஒருவித அர்த்தம் தோற்றுவித்து இருக்கின்றன. இறைக்கட்டளைக்கு பணிந்து பெற்ற மகனையே பலியிடத் துணிந்த இப்ராகிம் நபிகளாரின் தியாகம் இத்திருநாளில் நினைவு கூறப்படுகிறது. ஒவ்வொரு மனிதருக்கும்…

67-வது ரயில்வே வார விழாவை முன்னிட்டு ரயில் மாதிரி கண்காட்சி திருச்சியில் நடந்தது.

67வது ரயில்வே வார விழாவை முன்னிட்டு பொன்மலை ரயில்வே திருமண மண்டபத்தில் 09.07. 22, காலை 9.30 மணியிருந்து மாலை 5.00 மணி வரை ரயில் சம்பந்தப்பட்ட அஞ்சல் தலை, நாணயங்கள் மற்றும் ரயில் மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியினை பொன்மலை…

சிட் பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு 2000 கோடி வருமான இழப்பு – சிட்பண்டு உரிமை யாளர்கள் சங்கம் எச்சரிக்கை.

திருச்சியில் மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் ஆலோசகர் தங்கவேல் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்… தமிழகம் முழுவதும் சிட்பண்ட்ஸ் நடத்தக்கூடிய 2600 நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களுமே மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம்…

திருச்சியில் நடந்த தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க 5-வது மாநாடு தீர்மானம் நிறைவேற்றம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட 5-வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வி…