திருச்சி காபி கடையில் தீ விபத்து – அலறி ஓடிய பொதுமக்கள்.
திருச்சி சாலை ரோட்டில் உள்ள கும்பகோணம் ஐயங்கார் காபி கடையில் இன்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை கண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு கடையிலிருந்து சாலையை நோக்கி ஓடினர். இந்த தீ விபத்து குறித்து திருச்சி கண்டோன்மென்ட்…
2.50-கோடியில் நூலகம், அறிவுசார் மைய அடிக்கல் நாட்டி, 11.55 லட்சம் மதிப்பிலான நியாய விலை கடையை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்.
திருச்சி மாநகர் பகுதிகளில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ் காலனியில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி 2021-2022 ம் ஆண்டின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 11.55 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நியாய…
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற 12-ம் வகுப்பு பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி.
திருச்சி மண்ணச்சநல்லுார் பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சுதர்சன் வயது 18. இன்று விடுமுறை என்பதால் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளான். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென நீரில்…
அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப் பாயும் – திருச்சியில், அமைச்சர் கே.என். நேரு பேட்டி.
கடந்த 10-ஆண்டுகளாக திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா மேம்பால பணிகள் மத்திய பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 66சென்ட் நிலம் பெறமுடியாமல் பணிகள் நிறைவடையாமல் இருந்து வந்தது. தற்போது அந்த நிலத்தை பாதுகாப்புத்துறை வழங்கியதால் இன்று அப்பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. இப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை…
திருப்பைஞ்சீலி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக் கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கி.பி ஆறாம் நூற்றாண்டை சார்ந்த பழமையான புராதன சிறப்பு வாய்ந்த மேலச்சிதம்பரம் எனும் திருப்பைஞ்சீலியில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை நீலிவனேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சியாக…
திருச்சி பேக்கரியில் 155 கிலோ கெட்டுப்போன கேக் மற்றும் இறைச்சி அழிப்பு – உணவு பாதுகாப்பு துறை அதிரடி.
பொதுமக்களிடமிருந்து வந்த புகாரை அடுத்து திருச்சி தில்லை நகரில் உள்ள ஒரு பிரபல கேக் விற்பனை செய்யும் உணவகத்தை திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் ஆய்வு செய்தபோது கெட்டுப்போன சுமார் 27.450 கிலோ கேக்…
எலும்பு புற்று நோயினால் அவதிப்பட்ட 17-வயது சிறுவனுக்கு திருச்சி அரசு மருத்துவ மனையில் அதிநவீன அறுவை சிகிச்சை – டீன் வனிதா பேட்டி.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்… திருச்சி அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் அப்துல் காதர் (வயது 17) என்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு 3 மாதங்களுக்கு முன்பாக வலது…
திருச்சி ஆம்னி பேருந்து நிலைய கடைகளை அடித்து உடைத்து சேதப் படுத்துவதாக வியாபாரிகள் புகார்.
திருச்சி மாவட்டத்தில் மத்தியப் பேருந்து நிலையம் அருகே ரயில்வேக்குச் சொந்தமான இடத்தில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டுவருகிறது. இந்தப் பேருந்து நிலையத்தில் டீக்கடை, டிபன் கடை, பெட்டிக்கடைகள் ஆம்னி பேருந்து அலுவலகம், பழக்கடை உள்பட 60 வியாபாரக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.…
காவல் நிலையம் முன்பு வக்கீல்கள் தர்ணா போராட்டம் – ரயில் நிலையத்தில் பரபரப்பு.
திருச்சி ரயில்வே ஜங்ஷன் முதல் பிளாட்பாரத்தில் உள்ள இருப்புப்பாதை காவல் நிலையம் முன்பு வக்கீலை தாக்கியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், காவல் நிலைய ஆய்வாளரை கண்டித்து 30-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…
திருச்சி மலைக் கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் தேரோட்டம் – தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்.
திருச்சி மாநகரில் மிகவும் பிரசித்திபெற்ற ஆலயமாக திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மட்டுவார்குழலி அம்பிகை சமேத தாயுமானவர் சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மழையின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்டமான தாயுமானவ சுவாமி திருக்கோவிலில் இருந்து…
திருச் சபையின் மரபுக்கும், விதிகளுக்கும் முரணான தேர்தல் – TELC ஆயர்கள் குற்றச்சாட்டு.
தமிழக சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர்கள் ஆலோசனை கூட்டம் பேராலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தற்போது தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் ஆயர் தேர்தல் மற்றும் பல்வேறு நிர்வாக குளறுபடி காரணங்கள்…
மக்கள் அதிகாரம் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் – பொதுச் செயலாளர் ராஜூ அறிவிப்பு.
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ராஜூ திருச்சி பத்திரிக்கை யாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்:- தமிழகத்தில் அமைதியை கெடுக்கும் ஆளுநர் ஆர்.ன். ரவியை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், ஜனநாயக விரோத ஆளுநர் பதவியை உடனே ரத்து செய்ய…
திருச்சி அரசு மருத்துவ மனையில் உலக செவிலியர் தின விழா கொண்டாட்டம்.
ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை டீன் வனிதா தலைமையில் உலக செவிலியர் தின விழா கேக் வெட்டிக் கொண்டாட்டம்…
அச்சுத் தொழில் மூலப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டும் அச்சக சங்கத்தினர் திருச்சி ஆர்டிஓ-விடம் மனு
திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமாரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- எங்களின் அச்சுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள காகிதம் தினம் தினம்…
திருச்சி வங்கியில் பேட்டரி வெடித்து விபத்து – வாடிக்கை யாளர்கள், ஊழியர்கள் ஓட்டம்.
திருவரங்கம் கீழவாசல் வெள்ளை கோபுரம் அருகே தேசிய மயமாக்கப்பட்ட அரசு வங்கி உள்ளது. இந்த வங்கி இன்று காலை திறக்கப்பட்டு ஊழியர்கள் வழக்கம்போல் பணியை தொடங்கினர். வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்காகவும், போடுவதற்காகவும் தொடங்கினர். இந்நிலையில் திடீரென்று இன்வெர்ட்டர் யு.பி.எஸ் எனப்படும் பேட்டரி…