திருச்சி மரக்கடை வாட்டர் டேங்க் பின்புறம் உள்ள வளையல்கார தெருவில் சக்திமிகு மாரியம்மன் கோவில் உள்ளது. தற்போது நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் அம்மனுக்கு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. என் நிலையில் நேற்று நவராத்திரியின் ஆறாவது நாளை முன்னிட்டு மோகினி அலங்காரத்தில் உற்சவர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிறகு பூஜை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பிறகு இரவு 10 மணி அளவில் கோவிலை பூட்டி விட்டனர்.

இந்நிலையில் இன்று காலை கோவிலை திறக்க இளைஞர் குழு தலைவர், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் அங்கு சென்று பார்த்தார். அப்பொழுது கோவிலில் உள்ள உற்சவர் அம்மனின் நகைகள் திருட்டு போய் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உடனடியாக கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் மர்ம ஆசாமிகள் கோவிலின் வெளிபூட்டை உடைக்காமல் கேட் பகுதியின் வலது புறத்தில் உள்ள திரையை திறந்து ஒரு பெரிய குச்சியை விட்டு உற்சவாஅம்மனின் கழுத்தில் இருந்த நகைகளை திருடிச் சென்று உள்ளனர் என தெரியவந்தது.

மேலும் திருட்டுப்போன நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என தெரியவந்து உள்ளது. மேலும் இதன் அருகில் முலவர் சாமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அந்த நகைகளை மர்ம ஆசாமிகள் திருடவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த சில வருட காலமாக தொடர்ந்து அடிக்கடி திருட்டு சம்பவம் நடந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *