தமிழக வெற்றி கழகம் திருச்சி தெற்கு மாவட்ட தலைமை இளைஞரனி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆலோசனை கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் குடமுருட்டி கரிகாலன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது குறித்து பேசப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *