திருச்சி ரயில்வே ஜங்ஷன் நடைமேடை பகுதியில் அதிகாலை குற்றப்பிரிவு தலைமை காவலர் பிலால் மொய்தீன் மற்றும் பெண் காவலர் அர்ச்சனா ஆகியோர் ரோந்து பணியில் இருக்கும் போது நடைமேடை 5ல் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 2 சிறுவர்களை விசாரணை செய்ததில் சிறுவர்கள் இருவரும் திருச்சி காப்பகத்தில் இருந்து காணாமல் போன சிறுவர்கள் என்பது தெரிய வந்தது.

அவர்களை மீட்டு திருச்சி ரயில் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் மூலம் பாவை பவுண்டேஷன் மேலாளர் முரளீசுவரன் மற்றும் அருண் சின்னையா கணபதி ஆகியோரை தொடர்பு கொண்டு ரயில் நிலையம் வரவழைத்து அவர்களிடம் விசாரணை செய்ததில் திருச்சி மாநகரம், பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து , Boy missing வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் மோகன சுந்தரி அவர்களுக்கு தகவல் தெரிவித்து, திருச்சி இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவர்கள் முன்னிலையில் சிறுவர்களை நல்ல முறையில் ஒப்படைத்தனர்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்