தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வரின் பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்த நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி மாவட்டம் சார்பில் திருச்சி மாவட்ட முன்னாள் தலைவர் ஆர்.கே. ராஜா ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா அருகே இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியதுடன், அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக்கழகத்தின் மத்திய மாவட்ட தலைவர் செந்தில் நிர்வாகிகள் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் நந்தகுமார், சிந்தாமணி முத்துக்குமார், சவுகத், கெட்டப் ராஜேந்திரன் நிர்வாகிகள், கூட்டணி கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்