திருச்சி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய வார்டுகளில் தி.மு.க. கூட்டணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளிக்கப்படும் என்று தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவை வியாழக்கிழமை மாலை சந்தித்த பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் மவ்லவி எஸ்.ஏ.எச். உமர் பாரூக், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என். பீர் முகம்மது ஆகியோர் தெரிவித்தார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் 02.02.2022 புதன்கிழமை மாலை 03:00 மணிக்கு பாலக்கரை, காஜா கடைசந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே. ஹபீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார். கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இரண்டு வார்டுகள் கேட்டார்கள். அதேபோல் திமுக கூட்டணியில் பல முறை பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. அதிலும் இரண்டு வார்டுகள் கேட்கப்பட்டது. ஆனால் கேட்ட வார்டுகள் தி.மு.க. கொடுக்கப்பட வில்லை ஆகையால் வருகிற திருச்சி மாநகராட்சி மற்றும் தெற்கு மாவட்டத்தில் தேர்தலில் எந்தவித உடன்பாடுகள் ஏற்பட வில்லை ஆகையால் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக திருச்சி மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. என்று திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

அதன்பின் வியாழக்கிழமை காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் இல்லத்தில் தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு சந்தித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்தசெய்தி குறித்து இருவரும் பேசினார்கள். பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து போட்டி இல்லை என்று தெரிவித்த நிலையில் திருச்சி பாலக்கரை அலுவலகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் வி.எம். பாரூக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தனித்து போட்டியிடுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேருவை சந்தித்து தி.மு.க. கூட்டணியில் மாநகராட்சி தேர்தலில் ஒன்று அல்லது இரண்டு இடம் கேட்டு பெறுவது தொடர்பாக பேசுவதற்கு திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஏ.எச். உமர் பாரூக், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என். பீர் முஹம்மது ஆகியோர் சென்று பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது.

பின்னர் வியாழக்கிழமை மாலை தில்லை நகரில் உள்ள தி.மு.க. முதன்மை செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு அலுவலகத்தில் சென்று திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஏ.எச். உமர் பாரூக், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என். பீர் முஹம்மது ஆகியோர் சென்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவர்த்தையில் அமைச்சர் கே.என். நேரு கூறுகையில் திருச்சி மாநகராட்சி எல்லா வார்டுகளிலும் மனு தாக்கல் செய்து விட்டார்கள்.வரும் காலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஶ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய தொகுதியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய தேர்தல் நடைபெறுகிற இடங்களில் நிப்பந்தனையற்ற முழு ஆதரவு என்று அமைச்சர் நேருவிடம் திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஏ.எச். உமர் பாரூக், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என். பீர் முஹம்மது ஆகியோர் தெரிவித்தார்கள். அதேபோல் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் எம்.அப்துல் வஹாப், வடக்கு மாவட்ட செயலாளர் எம் கே. நிஜாம்தீன் ஆகியோர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியதாவது : திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட துறையூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் தி மு.க. தவைமையிலான கூட்டணிக்கு நிப்பந்தனையற்ற முழு ஆதரவு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *