அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் இன்று காலை மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 21 பாலக்கரை பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

மேலும் வள்ளுவர் நகர், ஜின்னா தெரு, நர்த்தஷா பள்ளிவாசல், ஜலால் பக்ரி தெரு, தர்கா காலனி, பாரதியார் சாலை வியாபார கடைகள் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் வாக்குகள் சேகரித்தார். உடன் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *