மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகமாக வருவதை தொடர்ந்து, அணையிலிருந்து காவிரியில் 1.75 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் முக்கொம்பூர், கொள்ளிடம் ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது எனவும். ஆற்றின் கரையோரம் உள்ளவா்கள் மேடான பகுதிக்கு சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் கரையோர கிராமங்களைச் சோந்தவா்கள் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களை கொண்டு செல்ல வேண்டும். மேலும் காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முக்கொம்பு காவிரியாற்றில் தண்ணீர் வெளியேற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து முக்கொம்பூர் அணையை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து கம்பரசம்பேட்டையில் உள்ள கங்காரு மனநலக் காப்பகத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் நேற்று நள்ளிரவில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்குள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிட உத்தரவிட்டு, நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிகழ்வின் போது அந்தநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர் துரைராஜ் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *