உயர் நீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் தமிழக அரசு உத்தரவின்படி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவது தடைசெய்யப்பட்டுள்ள உத்தரவை பின்பற்றவும் , நான்கு சக்கர வாகனங்கள் ஒட்டுபவர்கள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் , அவர்களது நலனில் அக்கரை கொண்டு , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவது தடை செய்யப்பட்டுள்ள உத்தரவை அமல்படுத்த வேண்டி , வாகன சோதனை மேற்கொண்டு நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி ஓட்டிவரும் வாகனங்களை கண்டறிந்து , உரிய மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது . அதன்பேரில் திருச்சி மாநகர கண்டோன்மெண்ட் , அரியமங்கலம் , பாலக்கரை , கோட்டை , உறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் சரகங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொண்ட சிறப்பு வாகன தணிக்கையில்

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தி ஓட்டிவரும் வாகனங்களை கண்டறிந்து , கண்டோன்மெண்ட் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் -30 வழக்குகளும் , பாலக்கரை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் -21 வழக்குகளும் , அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் -30 வழக்குகளும் , கோட்டை போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் -6 வழக்குகளும் , உறையூர் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் -2 வழக்குகளும் மற்றும் ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் -1 வழக்கும் , ஆக மொத்தம் 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , மேற்படி வாகனங்களில் பொருத்தியிருந்த பம்பர்கள் அகற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . திருச்சி மாநகரில் இதுபோன்று தடைசெய்யப்பட்ட பம்பர் பொருத்தி நான்கு சக்கர வாகனங்களை ஓட்டி வருபவர்களை கண்டறிந்து , அவர்கள் மீது உரிய மோட்டார் வாகன சட்டப்பிரிவின் கீழ் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *