நீட் தேர்விலிரிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளித்திடக் கோரியும், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்திடக் கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தேசம் தழுவிய அளவிலான, பெருந்திரள் ஆர்ப்பாட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள விக்னேஷ் ஹோட்டல் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் செல்வராஜ் துவக்கவுரை ஆற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, சொக்கி(எ)சண்முகம், அஞ்சுகம் , AIBEA மாவட்ட செயலாளர் ராமராஜ், AISF மாவட்ட செயலாளர் இப்ராஹிம், NFIW மாவட்ட தலைவர் பார்வதி, AITUC கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார், துணை செயலாளர் முருகன், ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் திராவிடமணி நிறைவு கண்டன உரை ஆற்றினார்.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் AIYF முன்னாள் மாவட்ட செயலாளர் சத்யா, மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் சுதாகர், மாவட்ட குழு தோழர்கள் சரண்சிங், விஸ்வநாத், மார்க்கெட் தேவா, பால்கிருஸ்டி, ராகுல் ,சந்தோஷ், விஜய், ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் AIYF மாவட்ட குழு உறுப்பினர் மார்க்ஸிம் கார்கி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *