திருச்சி சென்னை பைபாஸ் சாலை , சஞ்சீவிநகர் பகுதியில் , இளையதலைமுறையினர் எதிர்காலத்தை சீரழிக்கும் குட்கா போதை பொருள்கள் Virmal Pan Masala , Hans Chaap , Cool LIP ஆகியவற்றை விற்பனை செய்தவதற்காக கிருஷ்ணசிரி மாவட்டம் , ஒசூரில் இருந்து இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் 50 மூட்டைகளில் சுமார் ரூ .55,00,000 / – மதிப்புள்ள 1070 கிலோ குட்கா போதை பொருட்ள்களை வெங்காய மூட்டைகளுக்கிடையே வைத்து பதுக்கி கடத்தி வந்த , கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளியை சேர்ந்த சீனா ( எ ) சீனிவாசன் 27 மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தப்பள்ளியை சேர்ந்த சேகர் 28 ஆகியோர்களை கைது செய்து , வழக்குப்பதிவு செய்தும் , நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும் , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

எனவே , குற்றவாளிகள் சீனா ( எ ) சீனிவாசன் மற்றும் சேகர் ஆகியோர்கள் தொடர்ந்து குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கடத்தி விற்பனை செய்பவர்கள் என விசாரணையில் தெரியவருவதால் , மேற்கண்ட குற்றவாளிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட கோட்டை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து , திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

மேலும் , திருச்சி மாநகரில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீதும் , பள்ளி மற்றும் முக்கிய அலுவலகங்கள் அருகே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்