தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜோசப் விஜய் அவர்களின் ஆசியோடு திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வென்ற நமது வெற்றி வேட்பாளர் ரமேஷ் அவர்கள் வெற்றி பெற்று இந்து அறநிலை துறை அமைச்சராக பதவி ஏற்றதை கொண்டாடும் விதமாகவும்

வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் பெட்டவாய்த்தலை ஊராட்சி காமநாயக்கன் பாளையம் கட்சி நிர்வாகிகள் பூபதி, கோபால் ,பாலு, மகளிர் அணி நிர்வாகி சரிதா, ராஜேஷ், கமல், அருண் கார்த்திக், மோகித் சார்பாக

அனைத்து ஊர் பொதுமக்களுக்கும் கிடா விருந்து வைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் செந்தில் அவர்கள், மாவட்ட பொருளாளர் பாபு, பால்பாண்டி, அந்தநல்லூர் வடக்கு ஒன்றியம் சங்கர் திருவரங்கம் நகராட்சி தலைவர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்