Month: August 2021

காவிரி கரையோரத்தில் கலையிழந்த ஆடிப்பெருக்கு.

ஆடி பெருக்கையொட்டி திருச்சி காவிரி ஆற்றில் பொதுமக்கள் வழிபாடு நடந்த தடை விதிக்கப்பட்டதால், அம்மா மண்டபம் உள்ளிட்ட முக்கிய படித்துறைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆடிப் பெருக்கு விழாவின்போது திருச்சி மாவட்ட காவிரி ஆற்றில் பொதுமக்கள் நீராடி, பூஜை செய்வது வழக்கம். அதேபோல்,…

கட்டையால் அடித்து வாலிபர் கொலை போலீஸ் விசாரணை.

திருச்சி லால்குடி டான் போஸ்கோ சர்ச் எதிரே உள்ள அரிசி கடை வாசலில் ஒரு பிணம் கிடப்பதாக லால்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர் லால்குடி மணக்கால் பகுதி காமராஜர்…

ஆன்லைன் மோசடி குற்றவாளியை பிடித்த சி.பி.சி.ஐ.டி போலீசார்.

கடந்த 2017 ம் ஆண்டு வடமாநிலத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களை எல்.ஐ.சி. ஊழியர்கள் என தொலைபேசி மூலம் பேசி அறிமுகம் செய்துகொண்டு திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த அம்துல்கனி பாட்சா ( எ ) APL பர்வீன் கனி என்பவரிடம் அவரது…

திருச்சியில் (02-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 75 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 88 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 700 பேர்…

கலெக்டர் உத்தரவை காற்றில் பறக்க விட்ட சமயபுரம் கோவில் நிர்வாகம்.

*கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதால் இன்றும் நாளையும் திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மூடப்பட்டன – சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மட்டும் பக்தர்களை உள்ளே அனுமதித்த கோவில் நிர்வாகம்.* கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு…

கொரோனாவுக்கு இலவச மருத்துவம் அளிக்க தயார் – அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பேட்டி.

அனைத்து இந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சிறப்பு செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் முனைவர். ஜான்.ராஜ்குமார் முன்னிலை…

மணல் அள்ள அனுமதி கோரி-ஆதார் கார்டு, ரேஷன் கார்டுடன் மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்.

தமிழ்நாடு விவசாயிகள் திருச்சி மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் திருச்சியில் உள்ள தாளக்குடி, மாதவப் பெருமாள் கோவில் மாட்டுவண்டி மணல் குவாரியை திறந்துவிட வலியுறுத்தி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆதார் கார்டு மற்றும் ரேஷன்…

கோவில்கள் மூடல்-வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம்.

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின்படி 02-08-2021 மற்றும் 03-08-2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆடி கீர்த்திகை மற்றும் நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்களில் உள்ளே சென்று பக்தர்களுக்கு சாமி…

தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு – பங்கேற்ற பெண்கள்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக கடந்த 26-ம் தேதி திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டஆயுதப்படை…

பெண் கைதி தற்கொலை முயற்சி- திருச்சியில் பெரும் பரபரப்பு.

திருச்சி பெண்கள் மத்திய சிறையில் பெண் கைதி சத்யா தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டதில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்…

திருச்சியில் (01-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 69 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 104 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 714 பேர்…

தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம், தமிழ்நாடு வெட்ரன்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கார்கில் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு முன்னாள் ராணுவ வீரர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு வெட்ரன்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் கார்கில் விஜய் திவாஸ் 1999ஆம் வருடம் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினத்தை அனுசரித்து அந்தப் போரில் உயிர் நீத்த தியாகிகளின்…

நிறுத்தப்பட்ட அரசின் நிதியுதவியை மீண்டும் சிறுபான்மை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும் தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்‌.

தமிழக சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் மற்றும் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவை திருச்சி ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் சிறுபான்மை பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் பிரெட்டின் வரவேற்றினார். சிறப்பு அழைப்பாளராக கிழக்கு…

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு – கலெக்டர் சிவராசு எச்சரிக்கை.

கொரோனா நோய்த்தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தினை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தில் கொரொனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 01.08.2021 முதல் 07.08.2021 வரையிலான ஒரு வார காலத்திற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர்…