திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டத்திற்கு சொந்தமான இடத்தில் ஏசி அவுட்டோரில் உள்ள ரூபாய் 50,000 மதிப்புள்ள காப்பர்களை திருடிய நபர்கள் குறித்து புகார் பெறப்பட்டது. உடனடியாக இது குறித்து திருச்சிராப்பள்ளி ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் பிரசாந்த் யாதவ் உத்தரவின் பெயரில் ஆய்வாளர் அஜய்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் சப் இன்ஸ்பெக்டர்கள் செண்பகச் செல்வம், பழனியாண்டி, செல்வராஜா , குருநாத் தலைமை காவலர்கள் பாபு, இளையராஜா, ஜெயவேல், செல்வகுமார், சுரேஷ், முத்துக்குமார் மற்றும் மணிமாறன் ஆகியோர் குற்றவாளிகள் குறித்து தேடுதல் மற்றும் விசாரணையில் இறங்கினர்.

 அதன் அடிப்படையில் திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை பகுதியை சேர்ந்த சந்தோஷ், வயது 23, என்பவர் ஏசி காப்பர்களை திருடி திருச்சி எடமலைப்பட்டி புதூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த இரும்பு கடை வியாபாரி முருகேசன் வயது 53 என்பவரிடம் விற்றது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிந்து திருச்சி நீதிமன்ற காவல் உத்தரவின் பெயரில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்