திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி தலைமை அலுவலக கூட்ட அரங்கில் இன்று காலை மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் திவ்யா, ஆணையர் வீர் பிரதாப் சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன்,ஜெய நிர்மலா, ஆண்டாள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர் ராமதாஸ் எனது வார்டு குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு சொல்லுங்கள், மூன்று ஆண்டுகள் ஆகியும் தண்ணீர் பிரச்சனைக்கு நடவடிக்கை இல்லை. அதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் என மேயரின் முன்பு தரையில் உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து மேயர் அன்பழகன் இப்போது 55 வது வார்டு பகுதியில் நட்சத்திர டேங்க் கட்டப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் சப்ளை செய்ய சோதனை முயற்சி நடந்து வருகிறது ஒவ்வொரு கட்டமாகத்தான் நீரை ஏற்றி பரிசோதனை செய்ய முடியும். இன்று மீண்டும் கூடுதலாக தண்ணீர் இயக்கப்பட்டு சப்ளை செய்யப்படும். என தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து தர்மாகத்தை கவுன்சிலர் ராமதாஸ் கைவிட்டார்.
