ராகுல் காந்தியின் பதவி நீக்கத்தை கண்டித்து திருச்சி தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினரால் பரபரப்பு.
ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும் , நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி ,அதானி குழுமத்திற்குவிற்கும் பாஜக அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கமிட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் ரயில் மறியல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதன்…
ஸ்ரீ சைதன்யா பள்ளி “INTSO” தேர்வில் தங்கம் வென்ற மாணவ, மாணவி களுக்கு பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்தியா முழுவதும் ஸ்ரீ சைதன்யா பள்ளிகள் 600 இடங்களில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு கிளையான திருச்சி சொந்தண்ணீர்புரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளியில் ஐஎன் டிஎஸ்ஒ தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இப்பள்ளியில் இருந்து…
திருச்சியில் ஓடும் ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை.
கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரயில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது ரயில் முன்பு திடீரென வாலிபர் ஒருவர் ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…
திருச்சியில் ரூ.15000 லஞ்சம் வாங்கிய மின்சார உதவி பொறியாளர் கைது
திருச்சி மேலச் சிந்தாமணியை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 45. த/பெ. கோவிந்தசாமி. இவர் கட்டிட கட்டுமான தொழில் செய்து வருகிறார். அந்த வகையில் இவரது நண்பர் பாலு என்பவருக்கு ஸ்ரீரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை கிராமம், ஜெயராம் நகரில் ஒப்பந்த அடிப்படையில் வீடு…
உலக கல்லீரல் தினம் – அப்போலோ மருத்துவ மனை சார்பில் திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி.
ஏப்ரல் 19-ம் தேதி உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து திருச்சி அப்போலோ மருத்துவமனை சார்பில் கல்லீரல் ஆரோக்கியத்தை காப்பது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து இரண்டு…
திருச்சியில் வருகிற 24-ம் தேதி முப்பெரும் விழா மாநாடு லட்சக் கணக்கில் தொண்டர்கள் பங்கேற்பு – முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் பேட்டி
ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கு.ப. கிருஷ்ணன் இன்று திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் ஆணைப்படி திருச்சி மாநகர் ஜி.…
திருச்சி மத்திய சிறையில் யோகா பயிற்சியில் ஈடுபடும் கைதிகள்.
திருச்சி மந்தியசிறையில் சுமார் 1700-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். இவர்கள் வெளியில் செய்த குற்றங்களை நினைத்தும், தனது குடும்பத்தினருடைய சூழ்நிலையை நினைத்தும், மன அழுத்கத்துக்குள்ளான சிறைவாசிகளது மனஅழுத்தத்தை போக்கவும் சிறைவாசிகளது உடல்நலத்தை பேணிக்காக்கவும், தினசரி யோகா பயிற்சி அளித்தால் நலமானதாக இருக்குமென…
இளம் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர் அடித்துக் கொலை. 2-பேருக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கபிரியேல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் சந்தானம். இவரது மகன் 29 வயதான லூர்து ஜெயக்குமார். இவர் திருச்சியில் உள்ள தனியார் பர்னிச்சர் கடையில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்து வருகிறார். அதேபோல் லால்குடி அருகே…
திருச்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் – 2-மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட, கம்பரசம் பேட்டை பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு கடந்த சில மாதங்களாக ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி அலுவலர்களுக்கு புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்காத மாவட்ட…
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேரோட்டம் – முத்து கொண்டை, கிளி மாலை களுடன் தேரில் எழுந்தருளிய நம்பெருமாள்.
108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்றாலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக பார்க்கப்படுகிறது.பூலோக வைகுண்டம் என்று…
துபாயில் இறந்த வாலிபர்கள் உடல்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் அஞ்சலி.
துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த இமாம் காசீம், மற்றும் குடு (எ) முகமது ரபிக் ஆகியோர் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவரும்…
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் – ரெங்க நாதருக்கு ஸ்ரீவில்லிப் புத்தூர் வஸ்திர மரியாதை.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தது. ஸ்ரீவில்லிப் புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும்,…
திருச்சியில் டாஸ்மாக் கடை பூட்டு உடைப்பு – தப்பிய 2.77 லட்சம் பணம்.
திருச்சி மண்ணச்சநல்லூர் ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56).இவர் திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதன் விற்பனையாளர்கள் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டனர். பின்னர் சூப்பர்வைசர்…
பீமாநகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை மேம்படுத்த கோரி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த பள்ளி மேலாண்மை குழுவினர்.
திருச்சி பீமா நகர் பகுதியில் இயங்கி வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமரிடம் கோரிக்கை…
14-அம்ச கோரிக்கை வலியுறுத்தி TNCSC சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணா விரதம் போராட்டம்.
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி கலெக்டர் அலுவலக அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார்.துணைத் தலைவர்…