தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திருச்சி காஜா மலையிலுள்ள பெரியார் ஈ.வெ.ரா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியாரின் திரு உருவ சிலைக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில்,

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் அரசு என்கிற வார்த்தை இல்லாத ஒரே கல்லூரி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மட்டும்தான் தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆட்சியாளர்களால் professional English course கட்டாயம் என்றும் அதில் தேர்வாகி வந்தால் மட்டுமே பட்ட படிப்பை முடிக்க முடியும் என்கிற நிர்ப்பந்தம் இருந்தது. மேலும் proffsional English வகுப்பை ஆங்கிலத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் அல்லாது எல்லா ஆசிரியர்களும் பாடம் எடுத்து வந்தனர், இது மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது. இதுகுறித்து நான் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன், பின்னர் பல்கலைக்கழக மாநியக்குழு இது குறித்து விசாரித்தது,தற்போது இந்த Proffessional course நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த சுமை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலாம் உலக போரில் உயிர்நீத்த தியாகிகள் போர் நினைவு சின்னத்தை “பச்சம்பேட்டை வளைவு” ( லால்குடி மாந்துறை ) பராமரிக்க தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதி இருந்தேன் – தற்போது அதனை புதுப்பிக்க வரைபடத்தை வெளியிட்டு புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *