திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை யாத்ரி நிவாஸ் தோப்பில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி ஆனந்த் இவரது மனைவி நதியா இவர்களுக்கு இரண்டு ‘மகன்கள் மூத்த மகன் ஜீவா திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை 15ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக பள்ளிக்கு தாமதமாக சென்றுள்ளார். அப்போது பள்ளிக்கு ஏன் தாமதமாக வந்தாய் என கூறி பள்ளி தலைமை ஆசிரியரும் சக ஆசிரியரியர் ஒருவரும் மாணவன் ஜீவாவை முட்டி போட வைத்து கன்னம், முதுகு, மார்பு ஆகிய பகுதியில் அடித்தும், எட்டி உதைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

வலியால் துடித்த மாணவன் ஜீவா உடனடியாக பள்ளியிலிருந்து அழுதபடியே வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டு தனது தாயிடம் நடந்தவற்றைக் கூறி கதறி அழுதுள்ளார். மேலும் மாணவனுக்கு உடல்நலக்குறைவால் மயக்கமடைந்து தரையில் விழுந்துள்ளார். உடனடியாக பெற்றோர் மாணவனை தூக்கிக் கொண்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து திருச்சி கோட்டை காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

மாணவன் தாக்கப்பட்டது குறித்து அவரது தாயார் நதியா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

 

எனது மகன் ஜீவா வயது 16 தற்போது பத்தாம் வகுப்பு அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகிறார். எனது மகனுக்கு சிறுவயதில் ஒரு ஆபரேஷனும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொண்டையில் ஒரு ஆபரேஷன் நடந்து உள்ளது மேலும் எனது மகனுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக எனது மகன் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறி பள்ளி தலைமை ஆசிரியரும் சக ஆசிரியை அடித்ததில் எனது மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் படு பயங்கரமாக தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் மீது தற்போது வரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த ஒரு பள்ளி மாணவனுக்கும் ஏற்படக்கூடாது என அவரது தாய் மற்றும் பாட்டி கதறி அழுதனர்.

தற்போது திருச்சியில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் இல்லை பெற்றோரின் விருப்பத்துடன் பள்ளிக்கு வரலாம் என கூறிய நிலையில் இப்படி பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை தலைமை ஆசிரியர்  கொடூரமாக தாக்கிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *