திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னையா – இவரது மனைவி தனலட்சுமி இந்த தம்பதியினருக்கு தேவிபிரியா வயது (35) என்ற மகள் உள்ளார், இவருக்கு மதுரை அருகே பாலமேட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நிஷாந்த்குமார் என்ற 10 வயது மகன் உள்ளான். இந்நிலையில் வத்தலக்குண்டுவில் உள்ள அம்மாவுடைய வீட்டிற்கு வந்த தேவிபிரியாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 12 நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்றுவந்த தேவிப்பிரியா சிகிச்சை பலனின்றி இரவு மரணம் அடைந்தார். இந்நிலையில், தேவிப்பிரியா கணவர் சுப்பிரமணி, அவரது தகப்பனார் சின்னையா, தாயார் தனலட்சுமி மற்றும் உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் தேவிபிரியாவுக்கு கை நரம்பில் ட்ரிப் போடாமல் கழுத்தில் நரம்பு வழியாக ட்ரிப் போட முயன்றுள்ளனர்.

அப்போது, கழுத்தில் தவறான நரம்பை பயன்படுத்தி உள்ளனர். இதனால் மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தேவிப்பிரியா மரணமடைந்ததாக கூறி மருத்துவர்கள் மற்றும் மருத்துவனை நிர்வாகத்திடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மருத்துவமனையை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். பின்னர் மரணமடைந்த தேவிப்பிரியாவுக்கு நீதிகேட்டு, வத்தலக்குண்டு திண்டுக்கல் சாலையில், மருத்துவமனை முன்பு, நள்ளிரவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தேவிபிரியாவின் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வத்தலக்குண்டு காவல்துறை ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து, மருத்துவமனையில் மரணமடைந்த தேவிப்பிரியா உடலை உறவினர்கள் பெற்றுச் சென்றனர். இதனால், இந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *