நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி மாநகர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சி ஜங்ஷன் ராஜீவ் காந்தி சிலை அருகில் அருகாமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாநில முதன்மை துணைத் தலைவர் என்ஜினியர் பேட்ரிக் ராஜ்குமார், மாவட்ட பொருளாளர் முரளி, அமைப்புசாரா பிரிவு மாநில தலைவர் மகேஷ்வரன், கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராய், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
