பஞ்சஸ்தல விருட்சங்களுடன் வாஸ்து தோஷம் நீக்கும் புனிதத்தன்மையுடன், ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள பூலோகநாத சுவாமி கோவில் புதிய மண்டபங்கள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவுபெற்று அனுக்ஞை, விக்னேஸ்வரன் பூஜை மற்றும் வாஸ்துசாந்தி பூஜையுடன் கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதையொட்டி கடந்த 21ந்தேதி காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்ததுடன்,

இன்றுகாலை 6ம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாஹூதியுடன் நிறைவுபெற்று, யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கடன்கள் யாவும் சிவாச்சாரியார்களால் எடுத்துவரப்பட்டு பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க பூலோகநாதர், ஜெகதாம்பிகை அம்பாள், உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் ராஜகோபுரத்திற்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்