தமிழக வெற்றி கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரமான ஜோசப் விஜயின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவி, அன்னதானம் மற்றும் கொடியேற்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

 அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர மாவட்டம் மேற்கு பகுதியில் உள்ள திருச்சி புத்தூரில் தவெக மத்திய மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில், பகுதி செயலாளர் பூக்கடை மணிகண்டன் முன்னிலையில் தவெக கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து புத்தூர் பகுதியில் உள்ள பால்வாடியில் 100 குழந்தைகளுக்கு ஸ்லேட் மற்றும் பள்ளிக்கு 50 பாய் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள் இணைச் செயலாளர் அன்புராஜ் , பொருளாளர் சரவணன், துணைச் செயலாளர் மணிமாறன் , கிருஷ்ணவேணி, மற்றும் பகுதி நிர்வாகிகள் , வட்டக் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்