திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய கூட்டணி கட்சிகளுடன் திமுகவின் முதன்மை செயலாளரும் அமைச்சருமான கே என் நேரு தலைமையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2-வார்டு கொடுக்கப்பட்டது. இதில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்குள் வரக்கூடிய 23-வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக ஏஐடியூசி பொது செயலாளர் சுரேஷ்குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளரின் விபரம் :-

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர 23 வந்து வார்டு வேட்பாளர் சுரேஷ்குமார் வயது (55) ஏஐடியூசி திருச்சி மாவட்ட பொதுச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.இவரது மனைவி மணிமேகலை இவர்களுக்கு லிலாபாரதி B.sc, திவ்யபாரதி B.com மகள்கள் உள்ளனர். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக உள்ளார். இவர்23 வது வார்டில் பொதுமக்களுக்காக முன்னெடுத்த போராட்டங்கள், திருச்சி மக்களின் நலன் சார்ந்தும் தொழிலாளர் உரிமைக்காகவும் எண்ணற்ற போராட்டங்களை நடத்தி அதில் பல போராட்டங்களில் வெற்றி கண்டு இருக்கக்கூடியவர். சுற்றுச்சூழல் மாசை தடுக்கும் விதமாக கோணக்கரை சுடுகாடு மின் மயானத்தை அமைக்க போராட்டம் நடத்தி வெற்றி கண்ட இயக்கம். குறிப்பாக 23 வார்டில் உள்ள தேவர் காலனி மற்றும் காந்தி புரம் சாலையில் இருந்து சாலை ரோடு செல்லும் சாலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது, அந்த ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி தொடர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு அதன் பிறகு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. தெலுங்கு செட்டி தெரு தெருவில் புதிதாக ரேஷன் கடை அமைவதற்கும், காந்திபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் உருவாகுவதற்கும் 23வது வார்டில் நூலகம் அமைக்க கோரி போராட்டம் அதன் பிறகு கீழ சாயப்பட்டறை தெருவில் நூலகம் அமைக்கப்பட்டது. கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம் மூலம் பல்வேறு உதவிகளைப் பெற்றுத் தந்தது என்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான கதிர் அரிவாள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். 23வது வார்டு வேட்பாளராக சுரேஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *