திருவெறும்பூர் தொகுதி திமுக தேர்தல் பணிமனை அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திருவெறும்பூர் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து மாற்றுக் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களை வரவேற்றுப் பேசிய அமைச்சர் நீங்கள் அனைவரும் தமிழ்நாட்டின் நலனுக்கும், தமிழினத்தின் அரணாகவும் திகழும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில், திராவிட மாடல் 2.0 அரசு அமைய அனைவரும் ஒருங்கிணைந்து உழைக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் காட்டூர் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
