Month: September 2022

விசிக கவுன்சிலர் பிரபாகரனை கண்டித்து மறியல் போரா ட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் – திருச்சியில் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சி 17வது வார்டில் அலைகள் பெண்கள் கூட்டமைப்பின் சார்பில் கடந்த 22வருடமாக அப்பகுதியில் உள்ள மாநகராட்சி பொதுகழிப்பிடங்களை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது 17வார்டில் மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து வரும் விடுதலை சிறுத்தை கட்சியின் மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்…

திருச்சியில் போலீஸ் வாகனங்கள் பொது ஏலம் – எஸ்பி சுஜித் குமார் அறிவிப்பு.

திருச்சி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தபட்டு கழிவு செய்யப்பட்ட 3 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆக மொத்தம் 5 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே பொது ஏலம் மூலம் விடப்படுகிறது . வருகின்ற 26.09.2022 காலை 10…

மத்திய அரசை கண்டித்து விரைவில் ரயில் நிறுத்த போராட்டம் எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற் சங்கத்தினர் அறிவிப்பு.

இந்தியாவில் ரயில்வே உற்பத்தியில் ரயில் லோக்கோ தயாரிக்க தனியார் பயன்படுத்துவதை கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை முன்பு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தை கண்டித்தும் ரயில்வே உற்பத்தி பணிமனையை பாதுகாக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் எஸ்.ஆர்.எம்.யூ துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில்…

அனைத்து விவசாயிக்கும் ரூபாய் 6-ஆயிரம் வழங்க வேண்டும் – அய்யா கண்ணு தலைமையில் விவசாயிகள் நூதன போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு அனைத்து விவசாயிகளுக்கும் ரூபாய் 6 ஆயிரம் வருடம் தோறும் தறுவதாக தெரிவித்தது. ஆனால் தற்பொழுது…

அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் திருச்சியில் இன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்ட த்திற்கு அழைப்பு.

NIA மற்றும் அமலாக்கத் துறை, வருமான வரித்துறைகளை கொண்டு முஸ்லிம் சமூகத்தினை வஞ்சிக்க நினைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற சேவை அமைப்பினுடைய தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகளை எந்த முகாந்திரமும் இன்றி அத்துமீறி கைது செய்ததை கண்டித்து திருச்சியில்…

கல்லூரி மாணவரை கடத்திய 3 வாலிபர்கள் கைது – இருவர் தப்பி ஓட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்தவர் அருண் (25) என்பவர் கடந்த ஆண்டு கோவையில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது, கிரிப்டோ கரன்சி முதலீடு குறித்து அறிந்து, அதில் 40,000 ரூபாய் முதலீடு செய்தால் வாரம் தோறும் 2000 ரூபாய்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்-23ம் தேதி பேருந்துகளில் பயணம் செய்வதற்கான முன்பதிவு இன்று தொடக்கம்.

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை வருவதால் தொழில் நகரங்களான சென்னை, கோவை, ஓசூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பணி நிமித்தமாகவும் கல்வி நிமித்தமாகவும்…

சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த இயக்குனர், பெண் உதவியாளர் குண்டாசில் கைது.

சேலம் மாவட்டம் இரும்பாலையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக சேலம் ஐந்து ரோட்டில் உள்ள நோபல் கிரியேஷன்ஸ்…

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூபாய் 55 லட்சம், 135 கிராம் தங்கம்.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை…

15 ஆண்டுகள் வெளிநாட்டில் தலை மறைவாக இருந்த திருச்சி வாலிபர் சென்னை விமான நிலையம் வந்தபோது கைது.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (46). இவர் மீது 2007 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சனை கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ராமலிங்கத்தை கைது செய்து, விசாரணை நடத்துவதற்காக, மகளிர்…

பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் விவசாய வசந்தகால கடன் மேளா – விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 6.25 கோடி கடன் வழங்கப்பட்டது

திருச்சி மாவட்டம், லால்குடி சந்தைப் பேட்டை பகுதியில் அமைந்துள்ள தனியார் கூட்ட அரங்கில் பாங்க் ஆப் பரோடா வங்கி சார்பில் விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய வசந்தகால கடன் வழங்கும் விழா நடைபெற்றது.ரூ. 6 கோடியே 25…

கோழி திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் – 3 பேரை கோழிகளுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார்.

நாமக்கல் மாவட்டம் மின்னக்கல் கிரமத்தில் கடந்த 3 மாதமாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய தோட்டத்தில் வளர்க்கும் 200க்கும் மேற்பட்ட கோழிகள் தொடர்ச்சியாக மர்ம நபர்கள் திருடி வந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி…

விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் – கூட்டுறவுத் துறை முதன்மை செயலாளரிடம் தலைவர் அய்யா கண்ணு கோரிக்கை.

கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திருச்சி தென்னூர் அண்ணா நகரில் செயல்படும் கூட்டுறவு வங்கியில் , உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கி வாகனத்தில் நடமாடும் வங்கி இயக்கத்தினை தொடங்கி வைத்தார். அப்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

திருச்சியில் ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம் கவுன்சிலர் சுரேஷ் தலைமையில் இன்று நடந்தது.

திருச்சி மாவட்ட நூலக ஆனைக்குழுவின் கீழ் இயங்கும் உறையூர் குறத்தெரு ஊர்ப்புற நூலகம் வாசகர் வட்ட கூட்டம், அதன் தலைவரும் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் தலைமையில் நடைபெற்றது, கூட்டத்தில் கோவிந்தராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார் , ஊர்ப்புற நூலகர்…

மத்திய அரசை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சியில் சாலை மறியல் போராட்டம்.

தமிழகத்தில் சென்னை,கோவை, ஏர்வாடி, தேனி, கடலூர், தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் மற்றும் மதரஸாக்களில் மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில் அதன் தலைவர்களும் நிர்வாகிகளும்…