Month: November 2022

திருச்சி மல்லியம்பத்து ஊராட்சியில் நிதி முறைகேடு – ஊராட்சி தலைவர் விக்னேஸ் வரன் பதவி நீக்கம்.

திருச்சி மாநகர் அருகிலுள்ள ஊராட்சிகளில் குடியிருப்புகள் அதிகமாக உள்ளன வரிவசூல் , பிளான அப்ருவலுக்கு ஆன்லைன் ரசீது இல்லாததால் தலைவர்கள், கிளார்க்குகள் தனித்தனி ரசிது புத்தகம் வைத்துக் கொண்டு வரி வசூல் செய்தும், பிளான் அப்ரூவலும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்தநல்லூர்…

திருச்சி அருகே கிணற்றில் டிராக்டர் விழுந்து வாலிபர் பலி. சிறுகனூர் போலீசார் விசாரணை.

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் இவரது மகன் சதீஷ் வயது 21. இவர் இன்று காலை தனது உறவினருக்கு சொந்தமான டிராக்டர் வாகனத்தை எடுத்துக் கொண்டு அதே ஊரை சேர்ந்த மருதையான் கோவில் அருகே…

மாற்றுத் திறனாளிகளை சக மனிதர்களாய் மதிக்க வேண்டும் – திருச்சியில் நடந்த பள்ளி மாணவர் களின் விழிப்புணர்வு பேரணி

கடவுள் துகள் கண்டறிந்த ஸ்டீபன் ஹாக்கிங், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன் ஆகியோரும் மாற்றுத் திறனாளிகள் தான். எனவே மாற்றுத்திறனாளிகளின் மாண்பைக் காப்போம் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவோம் என்பதை சமூகத்துக்கு எடுத்துரைக்கும் விதமாக திருச்சி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டை காருகுடியில்…

ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமான 12 பேரும் மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் 21ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவு.

2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி அமைச்சர் கே.என்.நேருவின் . தம்பியும், தொழிலதிபருமான ராமஜெயம் கடத்தி கொலை செய்யப்பட்டார். திருவளர்ச்சோலை பகுதியில் உடலை கைப்பற்றிய போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 12க்கும் மேற்பட்ட தனிப்படைகள், பின்னர்…

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதி உயிரிழப்பு போலீஸ் விசாரணை.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள நம்பிவயல் கிராமம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுரேந்திரன் வயது (35). இவா் திருவோணம் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைதாகி, 11 ஆண்டுகள் தண்டனை பெற்று கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் திருச்சி மத்திய…

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு திருச்சியில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை தொடங்கினர்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். சபரிமலையில் நேற்று மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று சபரிமலை கோவில் மண்டல பூஜை துவங்கிய நிலையில்  மாலை…

திருச்சியில் பள்ளி மாணவர்களை நீண்ட நேரமாக வெயிலில் காக்க வைத்த 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ்.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் என இப்பகுதி 54 வார்டு…

திருச்சி மாநகராட்சி துணை மேயர் வார்ட்டில் தொடரும் அவலநிலை – காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டு செங்குளம் காலனியில் குடிசைமாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு 650க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் திருச்சி மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பிற்கு தேவையான…

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது.

திருச்சி தாராநல்லூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவச்சந்திரன் வயது 36 இவர் நேற்று என்.எஸ்.பி ரோட்டில் எலக்ட்ரிக் பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக தெப்பக்குளம் பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென அங்கு வந்து வாலிபர் ஒருவர்…

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் – 2 மணி நேரம் ரயில்கள் தாமதம்.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் இருந்து பழுதடைந்த ரயில் பெட்டிகளை பராமரிப்பு பணிக்காக பொன்மலை ஒர்க்ஷாப்பிற்கு கொண்டு செல்வது வழக்கம். அதன் படி இன்று மதியம் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பழுதடைந்த ரயில் பெட்டிகளை இன்ஜின் மூலம் பராமரிப்பு பணிக்காக…

மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ்,…

மடத்தை ஆக்கிரமித்த பாஜக மாநில நிர்வாகி – ஆலோசனை குழு தலைவர் விஜயராஜன் திருச்சியில் பேட்டி.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினம் 233 வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- காஞ்சிபுரம் தொண்டை மண்டல 233 வது மடாதிபதியாக நான் 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டேன்.…

திருச்சி தாட்கோ மூலம் ஆதிதிராவிட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் அமைக்க மான்யம் – கலெக்டர் தகவல்.

தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கவும் , அச்சங்கங்களுக்கு தேவைப்படும் பால் குவளைகள் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க மான்யமாக தலா ரூ .1 இலட்சம்…

திருச்சியில் திருநங்கையை கொலை செய்ய முயன்ற வாலிபர்கள் குண்டாசில் கைது .

திருச்சி சென்னை பைபாஸ் ரோடு , சங்கீதாஸ் ஹோட்டல் அருகில் நின்றுக் கொண்டிருந்த திருநங்கையை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரமறுத்ததால் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளிகள் வீரமணி வயது 22…

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி – ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராசன், மக்கள்…