Category: திருச்சி

த.மு.எ.க.ச சார்பில் வருகிற 16, 17-ம் தேதி கல்லூரி மாணவர் களுக்கு ஓவியம், கவிதை, பாடல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, பாடல் எழுதுதல், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 16 மற்றும்17-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. மதநல்லிணக்கம் அல்லது விடுதலை போராட்டம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டி வரும்…

திருச்சி காவிரி கொள்ளிடம் ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அல்ல அனுமதி கோரி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் காலம் காலமாக மாட்டுவண்டியில் மணல் அள்ளும் முறையை மாற்றக்கூடாது. மாட்டுவண்டியில் மணல் அள்ள பர்மிட்டுக்கு ரூ224ஐ விட கூடுதல் தொகையை வசூலிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மணல் தட்டுப்பாட்டை போக்க உடனடியாக மாட்டுவண்டி…

திருச்சி மேலப் பாகனூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபி ஷேகம் – 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி மணிகண்டம் ஒன்றியம் மேலப்பாகனூர் கிராமத்தில் அமைந்து அருள்பாலிக்கும் சித்தி விநாயகர், தானா முளைத்த (சுயம்பு) முத்துமாரியம்மன், மகா காளியம்மன், பகவதி அம்மன், ஐயனார், ஒண்டிகருப்பர், சிவன், நாகநாதர், நவக்கிரகங்கள் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களால்…

புதிய மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் ஆட்சியரிடம் மனு.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் திலீப்குமார் ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி சுப்பிரமணியபுரம், டோல்கேட் செல்லும் வழியில் ஒரு கடை மற்றும் கல்லுக்குழி மேம்பாலம் அருகில் சர்வீஸ் ரோட்டில்…

ஓட்டு போட்ட மக்களுக்கு வேட்டு வைத்த முதல்வர் ஸ்டாலின் – முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க சார்பில் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு…

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாம் கைதி வளர்த்த 1500 மரக்கன்றுகள் – தண்ணீர் அமைப்பிடம் வழங்கினார்.

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள கைதி இலங்கைத் தமிழர் மகேந்திரன் தனி மனிதராக வளர்த்த 1,500 மரக்கன்றுகள், 5,000 ற்கும் மேற்பட்ட புங்கன் விதைகள் ஆறு சாக்குகளில் தண்ணீர் அமைப்பிற்காக வழங்கினார். இந்நிகழ்வில் கொட்டப்பட்டு முகாம் துணை சார்பு…

சொத்துவரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் – முதல்வருக்கு பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை

தமிழகத்தில் வரலாறு காணாத சொத்துவரி உயர்வை பாதியாக குறைக்க வேண்டும் என – தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- மாநகராட்சி…

திருச்சி தாரநல்லூர் கிருஷ்ணா புரம் ரோட்டில் புதிய டாஸ்மாக் மதுபான கடை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட்சி திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.அசோக்குமார், காந்தி மார்க்கெட்…

ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் – வானில் பலூனை பறக்கவிட்டு கொண்டாடிய ஆட்டிசம் பாதித்த சிறப்பு பள்ளி மாணவர்கள்.

வருடம் தோறும் ஏப்ரல் 2ஆம் தேதி ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை நினைவு கூறும் வகையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், திருச்சி மாற்றுத் திறனாளிகள் அமைப்பு, இந்திய குழந்தைகள் மருத்துவ…

திருச்சி 56 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகர மேயரிடம் மனு அளித்த திமுக வட்ட செயலாளர் PRB பாலசுப்பிர மணியன்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக இன்று அளித்தனர். அதன்படி…

திருச்சியில் கேஸ் சிலிண்டர், விரகு‌ அடுப்பு வைத்து காங்கிரஸ் மகளிர் அணியினர் நூதன ஆர்ப்பாட்டம்.

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உறையூர் குறதெருவில் நடைபெற்ற மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஏற்றத்தை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் இன்று…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நூதன ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசு உடனடியாக அதனை நிறுத்த வேண்டும் – திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால், அரியாறு, கோறையாற்றில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ம.ப சின்னதுரை தலைமையில்…

திருச்சி அருகே லாரி-கார் மோதி விபத்து – 4-பேர் பலி, 4-பேர் படுகாயம்.

கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கார்முகில் இவர் தனது உறவினர்களுடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு. மீண்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு வந்துக்கொண்டு இருந்த பொழுது, பெரம்பலூர் மாவட்டம் அருகில் உள்ள…

திருச்சியில் மின்சாரம் தாக்கி சிறுமி பலி.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள குணசீலம் ஊராட்சி மஞ்சக்கோரை பகுதியை சேர்ந்த ராஜா – வனிதா தம்பதியினரின் இளைய மகள் வேதவர்ஷினி ( வயது 6), இவர் ஏவூர்அய்யம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் முதல் வகுப்பு படித்து வந்தார்.…

பாப்பாக் குறிச்சிக்கு புதிய வழித்தட நகரப் பேருந்து சேவை – அமைச்சர் அன்பில் தொடங்கி வைத்தார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியமங்கலம் காட்டூர் வழியாக பாப்பாக்குறிச்சி வரை செல்லும் புதிய வழித்தட நகரப்பேருந்து சேவையினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, மாநகராட்சி துணை மேயர்…

தற்போதைய செய்திகள்