திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, வேங்கூர், அரசங்குடி, முறுக்கூர், நடராஜபுரம் , தொண்டமான்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாணவர்கள் சிலம்பம் சுற்றி அவரை வரவேற்ற நிலையில், உற்சாகமடைந்த அவரும் மாணவர்களுடன் இணைந்து சிலம்பம் சுற்றி மக்களைக் கவர்ந்தார்.

திமுக மீண்டும் வெற்றி பெற்றால் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகியவை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். தற்போது தொடக்கப் பள்ளிகளில் நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டம், 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கூடுதலாக 15 லட்சம் மாணவர்கள் பயனடைவர்.

 கடந்த 2021 முதல் வேங்கூர் பகுதியில் சுமார் ரூ. 3.80 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களின் தொடர்ச்சியை உறுதிப்படுத்த உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட, இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். இந்த நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன் ஒன்றிய கழகச் செயலாளர் கருணாநிதி மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *