அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜசேகரன் இன்று காலை முதல் மாலை வரை கிழக்குத் தொகுதி முழுவதும் உள்ள பொதுமக்களிடம் திறந்தவெளி தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஊர்வலமாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

அருகில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் மாநகராட்சி துணை மேயருமான சீனிவாசன், முன்னாள் அமைச்சர் ரத்தினவேல், முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன், பாஜக மாவட்ட தலைவர் வண்டி முத்து, அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தனர்.
