தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தி பொதுமக்களும் வாக்கு சேகரித்து வருகின்றனர் அந்த வகையில் ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் துரைராஜ் நிறுத்தப்பட்டு பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான அமைச்சர் கே என் நேரு ஸ்ரீரங்கம் தொகுதி திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார். இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
