Month: October 2022

ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய அண்ணன், தம்பி – மனதார வாழ்த்திய முதியவர்கள்

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய்சரண் முதியோர் இல்லத்தில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட 50க்கு மேற்பட்ட முதியோர்கள் வசித்து வருகின்றனர். அவர்களும் தீபாவளி கொண்டாட…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் வெடி வெடித்து கொண்டாடிய குட்டீஸ்.

தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சிறுவா சிறுமியர் இன்று காலை முதல் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடினர். ஸ்ரீரங்கம்…

திருச்சி மக்கள் தீபாவளியை பாதுகாப்புடன் கொண்டாட அரசு மருத்து வமனை டீன் நேரு வேண்டு கோள்

தீபாவளி பண்டிகை நாளை உலகம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட உள்ளனர். வீட்டில் பலகாரங்கள் செய்து புத்தாடை அணிந்து சுற்றுப்புறத்தில் உள்ள வீடுகளுக்கும் உறவினர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் வெடிகளை வெடித்து கொண்டாடும் இந்த நல்ல திருநாளில் சிறு குழந்தைகள்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் இன்று காலை முதலே மீன், இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்..

தீபாவளி பண்டிகை முடிந்து மறுநாளில் இருந்து அமாவாசை மற்றும் சஷ்டிவிரதம் தொடங்க இருப்பதால் மீன் மற்றும் இறைச்சியை பொது மக்கள் வாங்காமல் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நாளை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள்…

திருச்சி மலைக் கோட்டை என்.எஸ்.பி ரோட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது .இதையொட்டி காவிரியில் ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், திருச்சி கடைவீதிகள் மக்கள் வெள்ளம் கரைபுரண்டன. மெயின்கார்டு கேட், என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, சூப்பர் பஜார், தெப்பக்குளத்…

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நீரேற்றும் குழாய்கள் உள்ள பாலத்தை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு

திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் உள்ள திருவெறும்பூர் கூட்டுக் குடிநீர் திட்ட தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து, நீரேற்றும் குழாய்கள் கொண்டு செல்லும் பாலம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பழுதடைந்துள்ளது. இந்நிலையில் பழுதடைந்துள்ள பாலத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்…

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ் சாலையில் விபத்து – பலியான ஓட்டுனர் உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த மற்றொரு கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் அந்த லாரியின் மாற்று ஓட்டுனர் ஆனந்த் (33) என்பவர் உயிரிழப்பு.…

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக பசும்பொன் முத்து ராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா திருச்சியில் நடந்தது.

முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை சார்பாக தெய்வத் திருமகன் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 வது தேவர் ஜெயந்தி விழா திருச்சி அருண் ஓட்டலில் இன்று காலை முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்…

திருச்சி மாநகர பகுதியில் பலத்த காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை.

தற்போது பருவ கால நிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக இரவில் மட்டுமே பெய்து வந்த மலை தற்போது பகலிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தீபாவளி பண்டிகையொட்டி புத்தாடைகள், நகைகள்,…

6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் உயர்நிலைப் பள்ளி கட்டிட பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் கே என் நேரு.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய மாதிரி உயர்நிலைப்பள்ளி கட்டிடம் 6 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ஆன கட்டுமான பணிக்கு தமிழக நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே என் நேரு அடிக்கல்…

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் மாபெரும் பொழுது போக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

மதுரை என்டர்டைன்மென்ட் சார்பில் ஆண்டுதோறும் திருச்சியில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பொழுதுபோக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இதில் திருச்சி மாநகராட்சி மேயர்…

திருச்சியில் தீபாவளி சீட்டு நடத்திய பெண் குழந்தை களுடன் மாயம் – போலீசார் விசாரணை.

திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு மொட்ட கோபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மனைவி காமாட்சி(32). இவர் அப்பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டு முடிந்த நிலையில் பணம் கட்டிய உறுப்பினர்கள் சீட்டு பணம் கேட்டு அவர் வீட்டுக்கு தொடர்ந்து…

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சியில் தற்காலிக பேருந்து நிலையம் – கமிஷனர் தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தீபாவளி பண்டிகை முன்னிட்டு திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு திருச்சி , தஞ்சாவூர் மார்க்கம் புதுக்கோட்டை மார்க்கம் மற்றும் மதுரை மார்க்கம் ஆகி…

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக விவசாய சங்கத்தினர் உண்ணா விரத போராட்டம்

தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயி சின்னதுரை தலைமையில் விவசாயிகள் கவனஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் விவசாய பணிக்கு வேலையாட்கள் கிடைக்காமல் இருக்கும் இந்த நிலையில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு…

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளி மாணவ, மாணவி களுக்கு அறிவியலை சுலபமாக கற்க செயல்முறை விளக்கம் அளிக்கப் பட்டது.

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்கம் சார்பாக, திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் “ரெய்லா” நிகழ்ச்சி இன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க தலைவர் Rtn. சத்யநாராயணன் தலைமை வகித்தார், ஸ்ரீரங்கம் எஜூகேஷனால் சொசைட்டி செயலாளர்…