Month: June 2026

மேகதாது அணை விவகாரம் – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் – அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் கோரிக்கை:-

திருச்சியில் உள்ள தனியார் கூட்டரங்கில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது இதில் விவசாய சங்கத்தின் தலைவர்கள் ராஜாராம், தன்பால், நல்லசாமி, தீட்சதர் பாலு , அய்யாக்கண்ணு வழக்கறிஞர் கோவிந்த சாமி, முத்து கிருஷ்ணன், நந்தகுமார்…

வருகிற உள்ளாட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் ஆதரவோடு மீண்டும் திமுக வெல்லும் – திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே என் நேரு பேச்சு:-

திருச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி எடமலைப்பட்டி புத்தூர் பகுதியில் மாவட்ட கழக துணை செயலாளர், மாமன்ற உறுப்பினர் முத்துச்செல்வம் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்…

ராகுல் காந்தியின் 56வது பிறந்தநாள் விழா – காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் நடந்த மாரத்தான் போட்டியை மாவட்டத் தலைவர் ரெக்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவர்களின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காங்கிரஸ் கட்சி சார்பில் மாரத்தான் போட்டி திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியை…

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாள் விழா – மாவட்டத் தலைவர் ரெக்ஸ் தலைமையில் கேக் வெட்டி, ரத்ததானம் வழங்கிய நிர்வாகிகள்:-

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி அவர்களின் 56வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மெயின் கார்ட் கேட் அருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான அருணாச்சல மன்ற கூட்ட அரங்கில் காங்கிரஸ்…

திருச்சி லால்குடியில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்கள் அளித்த 70 மனுக்களில் 20 பேருக்கு உடனடியாக பட்டாக்களை கோட்டாட்சியர் ஸ்ரீதர் வழங்கினார்:-

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) கோட்டாட்சியர் ஸ்ரீதர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் லால்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், மண்டல துணை வட்டாட்சியர் ஞானமூர்த்தி மற்றும் வருவாய் ஆய்வாளர்…

திருச்சியில் பிஸ்மி ஃபுட் கோர்ட் பிரியாணி கடை திறப்பு விழா – முதல் விற்பனையை அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்:-

திருச்சி கம்பரசர் பேட்டை முஸ்லிம் தெரு நூர் மஜித் அருகில் புதிதாக திறக்கப்பட்ட பிஸ்மி ஃபுட் கோர்ட் பிரியாணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர்…

இந்தியா – இலங்கை மீனவர் பிரச்சனையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் – திருச்சியில் இலங்கை எம்.பி ரவூப் ஹக்கீம் பேட்டி:-

இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும், கண்டி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், தமிழ்நாட்டில் புதிய வித்தியாசமான அணியினர் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கு முன்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லாதவர்கள், ஒரு… எதிர்பாராத வெற்றி…

ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியின் 80-வது பள்ளி பிறந்தநாள் விழா மற்றும் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது:-

ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் 80-வது பள்ளி பிறந்தநாள் விழா மற்றும் ஆண்டு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தலைவர் நந்தகுமார் , எஸ்.இ.எஸ் செயலர் கஸ்தூரி ரங்கன் பொருளாளர் கிரி…

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு வழக்கறிஞர் எட்வின் ஜெயக்குமார் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தவெக மாநகர், மாவட்ட தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்:-

தமிழக வெற்றி கழகத்தின் நிறுவன தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் விழா வருகிற ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது இதையொட்டி தமிழக வெற்றி கழகத்தினர் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்கூட்டியே கொண்டாடி வருகின்றனர். அந்த…

தமிழக அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் – தமிழ்நாடு பார்க்கவகுல பேரவை தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் வலியுறுத்தல்:-

தமிழ்நாடு பார்க்கவகுல பேரவையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமை தாங்கினார் வழக்கறிஞர் நேச மனோகர் வரவேற்பு ஆட்டினார் கூட்டத்தில் அகில பாரத பார்க்கவ குல சங்க நிறுவனத் தலைவர்…

திருச்சியில் தொடரும் மின் ஒயர் திருட்டு – குடிநீர் விநியோகம் பாதிப்பால் பொதுமக்கள் கடும் அவதி:-

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தாளக்குடி ஊராட்சியின் கீரமங்கலம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கீரமங்கலம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அருகே உள்ள சத்தியம் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக்…

திருவெறும்பூர் அரசங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீரென ஆய்வு செய்த எம்எல்ஏ நவல்பட்டு விஜி – பொதுமக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு:-

திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நவல்பட்டு விஜி திருவெறும்பூர் அருகே உள்ள அரசங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை இன்று காலை திடீரென ஆய்வு செய்தார். அப்பொழுது கர்ப்பிணி பெண்கள் வார பரிசோதனைக்காக வந்திருந்தனர். அப்படி வந்தவர்கள் அமர்வதற்கு இடம் இல்லாமல் வெளியில் நின்று…

தற்போதைய செய்திகள்