திருச்சி வெல்டிங் பட்டறை அதிபரிடம் வழிப்பறி – இருவர் கைது
திருச்சி விமான நிலையம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா (வயது 42 ).இவர் அப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஸ்டார் நகர் சந்திப்பு வயர்லெஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கத்திமுனையில் இவரை மிரட்டி ஒரு…
சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரைத் தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை – கலெக்டர் தகவல்.
திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு வருகிற 19ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில்…
பொது மக்களின் கோரிக்கை களுக்கு உடனடி தீர்வு காணும் திருச்சி மேயர் அன்பழகன்.
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான இடங்களில் திமுக வெற்றிபெற்றுது. திருச்சியில் மாநகராட்சி மேயராக அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றிலிருந்து இரவு பகலாக மக்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் திருச்சியில் முதன் முறையாக நடந்த மாநகராட்சி கூட்டத்தில்…
4-நாட்கள் தொடர் விடுமுறை – கூடுதலாக 1000 பஸ்கள் இயக்க தமிழக அரசு முடிவு.
தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை என தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்காக தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க…
பிஎஃப், கிராஜுவிட்டி கேட்டு தேசிய பஞ்சு மில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் இயங்கிவரனந்த உமா பரமேஸ்வரி மில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு திலிருந்து செயல்படவில்லை. மேலும் பஞ்சாலை நிர்வாகம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய கடன் காரணமாக சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் பஞ்சாலை எந்திரங்களையும்…
பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து – மக்கள் உரிமை கூட்டணி ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருச்சி மாவட்ட மக்கள் உரிமை கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட…
திருச்சியில் நடந்த தலைவர் கிரிக்கெட் லீக் போட்டி – தஞ்சாவூர் அணி வெற்றி.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, மாநில இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த 2020 ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான…
விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக திருச்சியில் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.
திருச்சி மாவட்டம் விமன் இந்தியா மூமெண்ட் சார்பாக இன்று தர்கா பகுதியில் மாபெரும் மத நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் மூமினா பேகம் தலைமையில் நடைபெற்றது. விம் பொதுச் செயலாளர் தெளலத் நிஷா வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ…
உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணங்கள் நிறுத்தி வைப்பு – துணை வேந்தர் அறிவிப்பு.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அதன் கீழ் செயல்படும் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கும் தேர்வு கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை மாற்றியமைத்தது. இந்த நிலையில் மாணவர்கள் அந்த கட்டணம் உயர்த்தப்பட்டதிற்கு எதிர்ப்பு…
திருச்சியில் நடந்த சமூகநீதி பாதுகாப்பு கழகத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் சமூகநீதி பாதுகாப்பு கழகத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முத்துராஜா தலைமையில் இன்று நடைபெற்றது. மாநில பொருளாளர் கோவிந்தராஜ், மாநில செய்தி தொடர்பாளர் ரவி ரத்தினம்,…
குருத்தோலை ஞாயிறு – பவனி சென்ற கிறிஸ்த மக்கள்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு யூதர்களின் ராஜாவாகிய இயேசு பவனியாக செல்லும்போது ஜெருசலேம் மக்கள் அவரை தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா, என வழி நெடுக வரவேற்றனர். அப்போது குருத்தோலைகளை மக்கள் பிடித்து இயேசுவை வரவேற்றதாக வேதாகமம் வெளிப்படுத்துகிறது. இந்த நிகழ்வை…
திருச்சியில் வேன் கவிழ்ந்து 30 பேர் படுகாயம் – 4 பெண்கள் கவலைக்கிடம்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அழுந்தலைப்பூர் கிராமத்தில் வேன் கவிழ்ந்ததில் வேனில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த அனைவரும் லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி…
திருச்சியில் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இக்பால் காலனி பகுதியை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி இவர் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நடராஜன் இவர் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு…
தமிழகத்தில் உள்ள 29 மாவட்டத்தில் கொரோனோ பூஜ்யம் என்கிற நிலையில் உள்ளது – தமிழக மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேட்டி..
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு செய்தார். பின்னா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்… திருச்சியில் 55 வயதில் மூளைச்சாவு அடைந்து நபரின் உடல் உறுப்புகளை தானமாக பெற்று உடல் உறுப்பு…
பெருநகர வளர்ச்சி குழுமத்தில் திருச்சி மாவட்டம் கண்டிப்பாக இடம்பெறும் – அமைச்சர் கே.என் நேரு பேட்டி
திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் 350 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்டமாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ள இடத்தை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார் – இந்நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட…