Month: July 2022

“தமிழ் முழக்கம்” எதிரொலி – சாலை நடுவே இருந்த பள்ளத்தை சீர்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்.

திருச்சி,தென்னூர் சிவன் கோவில் அருகே உள்ள அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு முன் 60-க்கும் மேற்பட்ட பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து ஒன்று பாதாள சாக்கடை‌ அமைக்கும் பணிக்காக சாலையின் நடுவே தோண்டப்பட்டு சரியாக மூடப்படாத…

திருச்சியில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டி – நடிகர் அஜித்குமார் பங்கேற்பு ; ரசிகர்கள் விரட்டியடிப்பு.

திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப் இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இங்கு 47வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவுகளில் நடைபெற உள்ளது.ஜூலை…

திருச்சி ரயில் நிலைய த்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது.

கடந்த 23.07.22-ந்தேதி காலை திருச்சி மாநகர காவல்துறை நுண்ணறிவு பிரிவு அலுவலக வாட்ஸ்அப் அலைபேசி எண்ணிற்கு 73394 99271 என்ற எண்ணிலிருந்து, ‘நான் மனித வெடிகுண்டு, இன்னைக்கு திருச்சி இரயில்வே ஸ்டேஷன்ல வெடிகுண்டு வைக்க போறேண்டா முடிஞ்சா காப்பாத்து என்ற வாசகங்கள்…

ஸ்ரீரங்கம் பகுதிக்கு ரூ.5 கோடி செலவில் தூய்மையான குடிநீர் அமைச்சர் கே.என்.நேரு தகவல்.

திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான கோசாலை உள்ளது. இங்குள்ள பசு மற்றும் காளை மாடுகளை 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா பசு ஒன்றும்,…

பயணிகளை ஏற்றிச் வந்த அரசு பேருந்து பள்ளத்தில் சிக்கியதால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி,தென்னூர் சிவன் கோவில் அருகே உள்ள அரசமரத்தடி பேருந்து நிறுத்தத்திற்கு முன் 60-க்கும் மேற்பட்ட பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த அரசு பேருந்து ஒன்று சாலையில் பாதாள சாக்கடை‌ அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டு சரியாக மூடப்படாத பள்ளத்தில்…

திருச்சி சாலைகள் அனைத்தும் சீரமைக் கப்படும் – மாநகராட்சி மேயர் அன்பழகன் உறுதி.

திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது .துணை மேயர் திவ்யா முன்னிலை வகித்தார் .கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஜெய நிர்மலா மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பேசினர்.…

சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.

திமுக அரசின் சொத்துவரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு, மின் கட்டணம் உயர்வை கண்டித்து திருச்சி மாநகர்,மாவட்ட அதிமுக சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மேல சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் மலைக்கோட்டை…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பழிவாங்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து திருச்சியில் சத்யா கிரக போராட்டம்.

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியாகாந்தி அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அமலாக்கதுறை மூலமாக பொய்யான வழக்குகளை பதிவு செய்து சர்வாதிகார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிற மத்திய பிஜேபி…

திருச்சி ஏட்டு வீட்டில் கோழி திருட்டு – 3 வாலிபர்கள் கைது.

திருச்சி சமயபுரம் சக்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் தலைமை ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டில் நாட்டுக்கோழி, புறா உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளை பராமரித்து ஆசை ஆசையாக வளர்த்து…

அரசு மதுபான கடைகளை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு அளித்த தமிழ் குறள் அறக் கட்டளையினர்.

தமிழ் குறள் அறக்கட்டளையின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாரிடன் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அரசு மதுபான கடைகள் அகற்றுவது என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லாதது போல் தெரிகிறது. மேலும் அரசு மதுபான கடையினால் அவ்வழியே…

மின் கட்டணத்தை மீண்டும் பழைய முறையில் கடைபிடிக்க வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் – கலெக்டரிடம் மனு.

திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் குணா மாவட்ட விவசாயி அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தினர். அந்த மனுவில்:- தமிழகத்தில் திமுக அரசு பதவி…

திமுக அரசை கண்டித்து முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு‌.பரஞ்ஜோதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் இணைப்பு கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு,…

“நேப்பியர் பிரிட்ஜ்” போன்று செஸ் ஆர்வலர் களின் முயற்சியால் மயிலாடுதுறையில் தயாராகி வரும் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பாலம்.

சர்வதேச 44-ஆவது ஒலிம்பியாட் செஸ் விளையாட்டு போட்டிகள் மாமல்லபுரத்தில் வருகின்ற 28-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் செஸ் போட்டி குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள்…

திருச்சியில் நடந்த செஸ் போட்டி – பங்கேற்று விளையாடிய கலெக்டர்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில், இன்று காலை திருச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற செஸ் விளையாட்டுப் போட்டியினை திருச்சி மாவட்ட கலெக்டர்…

மருத்துவர் ராமதாஸின் 84-வது பிறந்தநாள் – ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாட்டாளி தொழிற் சங்கம் சார்பில் காலை உணவு.

திருச்சி தெற்கு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களின் 84வது பிறந்தநாளை முன்னிட்டு துவாக்குடி நெடுங்குளம் பகுதியில் ஆதரவற்ற 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட செயலாளர் திலீப் குமார் தலைமையில்…