Month: August 2022

மழை வேண்டி கரகம் எடுத்து பக்தர்கள் சிறப்பு வழிபாடு:-

பெரம்பலூர் மாவட்டம்,ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க தேவையான அளவு மழை பெய்ய வேண்டி நேற்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தபடி…

திருச்சி முக்கொம்பூர் காவேரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகமாக வருவதை தொடர்ந்து, அணையிலிருந்து காவிரியில் 1.75 லட்சம் கன அடி நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் முக்கொம்பூர், கொள்ளிடம் ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளிக்கவோ துணி துவைக்கவோ கூடாது எனவும்.…

ஆடிப்பெருக்கு விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் அணி சார்பில் காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி.

ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது. அந்த வகையில் உலக நன்மைக்காகவும், காவிரியில் நீர் வற்றாமல் இருப்பதற்காக காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி…

திருச்சி காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட +2 மாணவன் சடலமாக மீட்பு

திருச்சி மதுரை ரோடு ஜீவா நகரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் முகேஷ் குமார். இவர் மரக்கடை பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லாமல் திருச்சி மேல சிந்தாமணி…

அரசு விரைவு பேருந்துகளில் பார்சல்கள் சர்வீஸ் – திருச்சியில் இன்று முதல் துவக்கம்.

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்லும் அரசு விரைவு பேருந்தில் பார்சல்கள் அனுப்பப்பட்டது. இதன் மூலம் அரசு விரைவு பேருந்தில் உள்ள சுமைப்…

தியாகி தீரன் சின்னமலை 217-வது நினைவு நாள் – மேயர் அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை.

சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 217வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு திராவிட முன்னேற்றக் கழக…

ஆடிப்பெருக்கு திருவிழா – திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் மக்கள் வெள்ளம்.

காவிரித் தாய்க்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளில் அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டுவிட்டு புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம். கடந்த…

பாஜக ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் சூரியா சிவா மீது ஐஜி-யிடம் திமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் புகார்.

தமிழக பாஜகவின் ஓ.பி.சி அணியின் மாநில செயலாளரான சூரியா சிவா சமீபத்தில் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரை விமர்சனம் செய்து பேசியதோடு நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரின் மறைந்த தம்பி ராமஜெயம் குறித்தும் பல…

ராக்கிங் செய்யும் மாணவர் களுக்கு டிசி – ஈ.வே.ரா அரசு கல்லூரி முதல்வர் சுகந்தி பேட்டி.

திருச்சியில் தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலையில் 15 பாடபிரிவுகள் உள்ளது. திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.…

நாளை ஆடிப்பெருக்கு விழா – பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர்.

நாளை (3.8.22) ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் உள்ளிட்ட காவிரி நீர்நிலைகளில் பொதுமக்கள் வழிபடுதல் மற்றும் நீராடும் இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று காலை நேரில் சென்று…

திருச்சி நீதிமன்றம் முதல் வயலூர் வரை 60 அடி சாலை அமைக்கப்படும் – எம்எல்ஏ பழனியாண்டி தகவல்.

திருச்சி மாவட்டத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தின் குறிக்கோள்கள் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வு…

செப்டம்பர் 10-ம் தேதி ஸ்ரீ நாராயண குரு சுவாமிகளின் ஜெயந்தி விழா – அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு.

மதுரை திருப்பரங்குன்றம், ஸ்ரீ நாராயணகுரு சாந்தலிங்க சுவாமி ஆசிரமத்தில் வீரேஷ்வராணந்தா சுவாமிகள் தலைமையில் ஸ்ரீநாராயணகுரு சுவாமிகளின் ஜெயந்தி விழாவிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகானின் 168 வது, ஜெயந்தி விழா வருகிற செப்டம்பர் 10ந்தேதி வெகு விமர்ச்சையாக திருப்பரங் குன்றத்தில் கொண்டாடுவதற்க்கு…

திருச்சியில் முன்னறிவிப்பு இன்றி கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு – சலவை தொழி லாளர்கள் சாலை மறியல்.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நூற்றுக்கணக்கான சலவை தொழிலாளர்கள் துணிகளை துவைத்து அதனை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர், இந்நிலையில் நேற்று மாலைக்கு மேல் முன்னறிவிப்பு இன்றி அதிகப்படியான தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 50க்கும் அதிகமான சலவைத் தொழிலாளர்கள்…

திருச்சியில் போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தீ குளிக்க முயற்சி.

திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதி சேர்ந்தவர் ஷேக்தாவூத் இவரது மனைவி பாத்திமா. இவர் தனியார் நிதி நிறுவனத்தில் லாரி ஒன்று வாங்கி மாதம் தோறும் அதற்கு பணம் கட்டி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது வாகனத்தின் லைசென்ஸ் ,…

தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்றுநோய், கட்டிகள் வராது – டீன் நேரு பேட்டி

உலக தாய்ப்பால் வாரம் இன்று முதல் கடைபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம், முறையாக தாய்ப்பால்…